Monday, March 17, 2014

பிரிவு - சாதி - புரிதல்

நான் :- ஹிந்து மதத்தில் இருக்கும் பெரிய குறைபாடே சாதி தான், அதற்காக தான் பெரியார் ஹிந்து மதத்தை அதிகமாக விமர்சித்தார். அவரின் நாத்திகம் சாதிய அடிப்படையிலான இறை மறுப்பு நாத்திகம்.

அ.அ (அடுத்தாத்து அம்பி!) :- கிறித்துவத்திலும்,இசுலாமிலும் தான் சாதி இருக்கிறது.

நான் :- எப்படி?

அ.அ :- கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்ட் மற்றும் ஷியா, சன்னி.

நான் :- வழிபாட்டு அடிப்படையிலான நேர்க்கோட்டு பிரிவுக்கும், பேதம், தீண்டாமை வளர்க்கும் செங்குத்து சாதி கட்டமைப்பிற்கும் வித்தியாசம் இல்லை?

அ.அ :- உங்களுக்கு அது பிரிவு, எங்களுக்கு அது சாதி!!!

நான் :- சரி அப்படியென்றால் மதம் மாறியும் சாதி மாறாமல் முன்னிறுத்தப்படும் கிறித்துவ நாடார், கிறித்துவ வன்னியர், கிறித்துவ தலித் என்பவை ?

அ.அ :- அதுவும் சாதிகள் தான்!

நான் :- ம்ம்ம். அப்படியென்றால் சைவம், வைணவம் என்பவை சாதிகளா இல்லை ஹிந்து சமய பிரிவுகளா?

அ.அ :- அவைகள் மதக் கோட்பாடுகள், பிரிவுகள்.

நான் :- வழிபாட்டின் அடிப்படையில் அவைகள் பிரிவுகள் என்றால்... அதே வழி பாட்டு முறை அடிப்படையிலான கத்தோலிக்க, பிராட்டஸ்டண்ட் மற்றும் ஷியா மற்றும் சன்னி பிரிவுகள் மட்டும் எப்படி சாதிகளாகும்???

அ.அ :- இல்லை அவைகள் சாதிகள் தான்!

நான் :- ஒரு கத்தோலிக்க கிறித்துவன் அங்கு பாதிரியாக தடையில்லை, பிராட்டஸ்டண் பாஸ்டர் என்பதற்கும் அப்படியே... இசுலாம் மதத்திலும் அப்படியே. ஆனால் தமிழ் நாட்டின் ஹிந்து கோயில்கள் என்று அழைக்கப்படும் அனைத்து கோயில்களிலும் அதற்கான ஆகம விதிகளை கற்றுத் தேரும் பட்சத்தில் எந்த சாதியினரும் அர்ச்சகராக இன்னும் தடைகள் இருக்கிறதே... அது ஏன்? ஒரு கிறித்துவன் அவன் கோயிலுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இசுலாமியனுக்கும் அப்படியே...
ஒரு ஹிந்து அவன் எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள் சென்று கடவுளை காண, வழிபட முடியுமா??? இது தானே பிரிவுக்கும் சாதிக்குமான வேறுபாடு.

அ.அ (அம்பிகள்) :- டேய் அந்த பயலே இந்த பயலே யாருடா நீ...மிஷனரியா, அரேபிய அடிமையா...பொறம்போக்கு நாயே, ராமசாமி அடிவருடியா நீ.....etc etc etc

# நீங்களாம் நல்லா வருவீங்க டா!!! 

No comments: