Wednesday, April 9, 2014

எதிரும் புதிரும் (பொழிவு-1)-சுப.வீ. ஆன்மீகமும் அறிவியலும் 1.

எதிரும் புதிரும் (பொழிவு-1)-சுப.வீ. ஆன்மீகமும் அறிவியலும் 1.

இரண்டுமே ஒரு வித தேடல் தான்.

அதாவது நாம் பிறப்பதற்கு முன்பு, இறந்த பின்பு என்னாவோம், நம் வாழ்க்கை, உலக இயக்கம் பற்றிய ஒரு வித தேடல் ஆன்மீகம்.

அறிவியல் என்பது வெறும் தேடலல்ல அது ஒரு ஆய்வு.

இரண்டிற்குமான வேறுபாடு என்பது... 

அறிவியல் இந்த உலகத்திலிருந்து, உலகம் பற்றின ஆய்வை தொடங்குகிறது.உலகத்திற்கு வெளியே பிரபஞ்சம் என்று சொல்லப்படுகின்ற பேரண்டம் வரையிலும் இந்த ஆய்வு செல்கிறது.

ஆன்மீகத்தின் தேடல் பேரண்டத்திலிருந்து வெளியே இருந்து தான் உள்ளே வருகிறது,பேரண்டத்திற்கு வெளியே என்ன இருக்கிறது என்று தேடுகிறது.

அடுத்த அடிப்படை மற்றும் அழுத்தமான வேறுபாடுகள்...

ஆன்மீகம் நம்பிக்கை சார்ந்தது, அறிவியல் சோதனை சார்ந்தது.
சரணாகதி தத்துவம் ஆன்மீகம்,சந்தேகி என்கிறது அறிவியல்.
நம்பு என்பது ஆன்மீகம், சோதனை செய் என்கிறது அறிவியல்.