Monday, August 27, 2012

இன்றைய அனுபவம் (26.08.2012) - கர்த்தாவே இவர்களை மன்னியும்


எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் மனைவியை திருப்திபடுத்தும் நோக்கில் சென்னையில் இருக்கும்பொழுது ஞாயிறு திருப்பலிக்கு செல்வது வழக்கம். அந்த ஒரு மணி நேரம் தேவாலயத்திற்கு வெளியே தனிமையுடனும் பிறகு மகனுடனும் நேரம் செலவழிப்பது வழக்கம்.

அமெரிக்காவிற்கு வந்த பிறகு நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அரைமணி நேரம் தொலைவில் இருக்கும் காலனி என்கின்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் மாதம் ஒருமுறை நடக்கும் தமிழ் திருப்பலியில் பங்கு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். என் மனைவிக்கு திருப்பலியில் பங்கு பெற்ற திருப்தி. எனக்கும், என் மகனுக்கும் ஒரு சுற்றுலா செல்வது போன்ற மகிழ்ச்சி!

நேற்றைய திருப்பலியில்(26 ஆகஸ்ட் 2012) பிரசங்கத்தின் மையக்கருத்து இது தான். நம் நினைப்பை, சிந்தனையை கடவுள் அறிவார்.இதே கருத்து ஹிந்து மதத்திலும் சொல்லப்படுவது உண்டு. இசுலாமிய மதம் பற்றிய போதிய அறிவு எனக்கு இல்லை.

இந்த கருத்தை பாதிரியார் கூறியபொழுது, அங்கு இருந்த கிட்டத்தட்ட 70 பேரும் மிகவும் ஆழமாகவும்,உன்னிப்பாகவும் கவனித்துக்கொண்டிருந்தனர்.பெரியார் ஊட்டிய பகுத்தறிவு அந்த அனைவரையும் இயேசு நாதர் கூறிய ஆட்டு மந்தைகள் போன்று உணரவைத்தது. என்னால் நிலை கொள்ள முடியவில்லை. அங்கேயே எழுந்து என் சந்தேகத்தை கேட்க வேண்டுமென தோன்றியது, ஆனால் இடம்,பொருள்,ஏவல் கருதி அமைதியாக இருந்து விட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு பாட்டு புத்தகத்தில் என் சந்தேகத்தை எழுதி வைத்தேன்....பார்ப்பவர்கள்,படிப்பவர்கள் சிந்தனைக்கு. அந்த சந்தேகத்தை பாதிரியாரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப இருக்கிறேன். எனக்கு உதித்த சந்தேகம் உங்களின் கவனத்திற்கு, சிந்தனைக்கு.....

" நம் நினைப்பை, சிந்தனையை அந்த கடவுள் அறிந்தால் நம் சிந்தனையில் , நினைப்பில் உதிக்கும் கொலை,கொள்ளை போன்ற நிகழ்வுகளையும் அந்த கடவுள் அறிவார் தானே??? நம் நினைப்பை,சிந்தனையை அறியும் சக்தி படைத்த அந்த கடவுளுக்கு தீய எண்ணங்களை மாற்றும் சக்தியோ, அந்த நிகழ்வுகளை தடுக்கும் சக்தியோ இல்லாமல் இருப்பதேன்?????"

தெரிந்தால் சொல்லுங்கள்.....