Monday, March 17, 2014

தீபாவளி கதை

இது பல முறை கேட்ட புராண இதிகாச கதை அல்ல, ஒரு உண்மை சம்பவம்!!!
எங்கள் அலுவலகத்தில் நடந்த உண்மை சம்பவம், இந்த சம்பவம் யார் மனதையும் புண்படுத்தினால் அதற்கு நானோ என் எழுத்துக்களோ இல்லை முக நூலோ பொறுப்பாக முடியாது!?

நான் வேலை பார்க்கும் Account வட ஹிந்தியாவை சேர்ந்ததால் இங்கு Client Place-இல் வட ஹிந்தியர்கள் அதிகம். சென்ற இரண்டு முறையும் தீபாவளியை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.இது ஹிந்தியர்களின் பண்டிகை என்கின்ற தம்பட்டம் வேறு. நான் எப்பொழுதும் போல கலந்து கொண்டதில்லை. பொங்கலை மட்டும் என்னால் முடிந்த அளவு அலுவலகத்தில் கொண்டாடுவேன் அதாவது அலுவலகத்தில் பொங்கலை வைத்து அது பற்றின குறிப்பை எழுதி வைத்து தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புவது.(முக்கியமாக இங்கிருக்கும் Client-ற்கு...)

இந்த முறை எங்கள் Team-இல் தீபாவளியை சிறிய அளவில் கொண்டாடலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொருவரும் ஏதாவது செய்து கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனக்கு Chicken Briyani மற்றும் Veg Briyani. சரி தப்பிக்க முடியாது...அவர்கள் வட ஹிந்தியர்கள் அவர்களின் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் அதில் கலந்து கொள்கிறோம் என்கின்ற அளவில் ஒத்துக் கொண்டு விட்டேன். Indian Ethinic Wear போட்டு வர வேண்டும் என்று கூறினார்கள்... ஆரம்பிச்சுட்டானுங்கடா என்று நினைத்துக் கொண்டு அன்றைய தினம் காலையில் என்ன ஆடை அணியலாம் என்று தேடினேன்... கண்ணிலும் கையிலும் அகப்பட்டது அந்த கறுப்பு T-Shirt(!), போட்டுக் கொண்டு வந்துவிட்டேன்.

ஏன் தீபாவளியை கொண்டாடுகிறோம் என்று இராமாயண கதையை You Tube-இல் போட்டார்கள்...
நரகாசுரன் கதை என்ன ஆச்சு என்று அருகில் இருந்தவனிடம் கேட்டேன்...
நிறைய கதை இருக்கும் நாங்க இந்த கதையை தான் நம்புறோம் என்றான்,
சரி என்றேன்.

இங்கிருந்த Client ஒருவர் இது எப்பொழுது நடந்தது என்று கேட்டார். என் Team நபர் மிகவும் ஆர்வக் கோளாறாக ரொம்ப வருடம் முன்பு,1 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என்றான். எனக்கு தூக்கி வாறிப் போட்டது, எனக்கே அப்படி என்றால் இங்கிருக்கும் Client-ற்கு!?

அப்படியென்றால் Dinosaur-லாம் இருந்திருக்கக் கூடுமோ என்று ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள், நிலைமையை புரிந்து கொண்ட Project Manager இல்லை இதை வெறும் கதை என்றும் சிலர் கூறுவர் என்று பேச்சை மாற்ற முயன்றார்.

அந்த Team நபர் விடுவதாக இல்லை.... இல்லை கண்டிப்பாக பல ஆண்டுகள் முன்பு...என்ன சரியா என்று என்னை கோர்த்து விட்டான்.

இராமாயணப்படி 27 இலட்சம் ஆண்டுகள்(திரேதாயுத காலம்) என்று அவர்கள் சொல்கிறார்கள்...Homo Sapiens தோன்றி 35000 ஆண்டுகள் என்று அறிவியல் சொல்கிறது...இறுதியாக இந்தியா - இலங்கை கடற்கோள் பிரிந்தது 17000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சொல்லப்படுகிறது(இப்பொழுது பிரிந்த ஹிந்தியா - இலங்கை கடற்பரப்பில், ஏன் 27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில்பாலம் கட்ட வேண்டும் என்பது அடுத்த கேள்வி.). சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியது 4500 ஆண்டுகளுக்கு முன்பென ஆராய்ச்சி சொல்கிறது. (அப்படியெனில் 27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னேறிய நாகரிகம் எப்படி சாத்தியம் என்பது மற்றுமொரு கேள்வி).அப்படியெனில் இராமாயணம் என்பது 4500 ஆண்டுகளுக்கு உள்ளாக எழுதப்பட்ட ஒரு கதையாக இருக்கக் கூடும் என்று கூறினேன்.

கதை முற்றும்.

No comments: