Tuesday, February 21, 2012

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா

சிந்து - சிந்தி - சிந்தியா --- இந்து - இந்தி - இந்தியா (Sindhu - Sindhi - Sindhiya - Indhu - Indhi - Indhia)[ உண்மை வரலாற்றை தெரிந்து கொள்ள,புரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி!!! ]

இந்தியா என்று கூறியவுடனும், ஜன கன மன கதி பாடும்பொழுதும் மெய் சிலிர்ப்பது எல்லாம் எனக்கும் நிகழ்ந்தது நான் பத்தாவது படிப்பதற்கு முன்பு வரையில்...ஒவ்வொரு சுதந்திர நாளிலும் பள்ளிக்கு செல்லும் பொழுது எங்கள் நகருக்கு(லெனின...் நகர்) பக்கத்து நகரை(ராம் நகர்) தாண்டி செல்கையில் காக்கி சட்டை,அரைக்கால் சட்டை மற்றும் தொப்பியுடன் ஒரு கூட்டம் ஆவேசமாக சுதந்திர நாளை கொண்டாடுவதையும்,எங்களை நிறுத்தி கொடிக்கு வணக்கம் செலுத்தி விட்டு போக சொல்வதையும் அந்த வயதில் நான் பெரிதாக யோசித்ததில்லை,யோசிக்கும் மன நிலையும் அப்பொழுது இல்லை மறைக்கப்பட்ட வரலாற்றையே நான் அதுவரை பள்ளியில் படித்ததால்.....அப்பொழுதெல்லாம் காந்தியும், நேருவும் தான் எனக்கு கதா நாயகர்கள்!!! அந்த கூட்டத்தை பற்றி அப்பா சொல்வார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்று...அப்பொழுது ஒரு விடயத்தை பற்றி மட்டும் ஒப்புமை படுத்திப் பார்க்கத் தோன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்த கோட்ஸே காந்தியை கொன்றான் என்ற நிகழ்வையும் அப்பா கூறிய அந்த விளக்கத்தையும் ஆனால் அதற்கு மேல் அந்த விடயத்தை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு அப்பொழுது இல்லை...சிறு வயதிலிருந்தே பேச்சு,கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு இருந்ததால் 1997 ஆம் ஆண்டு (பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்பொழுது)எங்கள் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய இந்திய சுதந்திரத்தின் 50 வது ஆண்டு பொன்விழாவில் பேசினால் என்ன என்று தோன்றியது.அதற்கான குறிப்புகளை சுப வீயிடமிருந்து(அப்பாவின் நெருங்கிய நண்பர்) பெற்ற பொழுது,அவர் கூறிய இரண்டு குறிப்புகள் இந்திய சுதந்திரத்தின் மீது இருந்த ஆர்வத்தை சிறிது குறைத்தது...இந்த பொன்விழாவில் தான் உத்திரபிரதேசத்தில் அதுலா தேவி என்ற தாழ்த்தப்பட்ட பெண் கோயிலுற்குள் நுழைந்த காரணத்தினால் அவளை பலாத்காரம் செய்து அவள் கணவனை கொன்ற நிகழ்வு...மேலும் கே.ஆர் நாராயணனை இந்தியாவின் முதல் குடிமகனாக ஆக்கினால் மட்டும் இதற்கு தீர்வு கிடைத்திடாது ஏனெனில் அவருக்கும் திருப்பதியில் சிவப்பு கம்பள விரிப்பு மறுக்கப்பட்ட நிகழ்வு....இந்த இரண்டு குறிப்புகளை முன்னிறுத்தி பேசியபொழுது வித்தியாசமாக இருந்தது எனக்கும் கேட்டவர்களுக்கும்!!! இதன் மூலம் எனக்கு தோன்றிய கேள்வி.. இது யாருக்கு கிடைத்த சுதந்திரம்...???அப்பொழுது தான் அப்பாவின் மூலம் எனக்கு நன்கு பரிச்சயமான பெரியாரின் மேலும்,மேலோட்டமாக அறிமுகமான அம்பேத்காரின் மேலும் ஆர்வம் அதிகரித்தது.........ஆனால் அப்பொழுதும் காந்தி, நேரு மீதிருந்த மதிப்பு குறையவில்லை....சிந்தனைகளும், ஆய்வுகளும்(தந்தை பெரியார் நமக்கு விட்டுச் சென்ற கடைசி ஆயுதம்!!!) தொடரும் ......................

No comments: