Monday, June 6, 2011

மனு தர்மமும், மானிடமும்

நூல் தோற்றம்,உலகின் தோற்றம்,கல்வி,திருமணத்திற்கு முன்,பிராமணர் இல்லறம்,பிராமணர் உணவு,காடுறைதல்,அரசன்,அறம், நிலமும் விதையும்,வருணங்கள்,மாபாவம் ஐந்து,வினையும் விதியும்,பொருள் அடைவு....ஒவ்வொரு பொருளடக்கத்திலும் நீதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.பெரும்பன்மையான நீதிகள் வருணங்களையே சுற்றி சுற்றி வருகின்றன.மேலும் மனுவில் உள்ள நீதிகளை தரும்பொழுது அது எந்த பொருளடக்கத்தில் வருகிறது நீதி எண் என்ன என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.....உங்கள் கருத்துப்படி வருணத்தின் அடிப்படையில் ஒருவன் இன்ன தொழில் தான் செய்ய வேண்டும் இல்லையேல் அவன் தண்டிக்கப்படுவான் பிராமணன் உட்பட (தண்டனையில் வேறுபாடு இருக்கலாம் ஏனெனில் வேதங்களை கற்றுணர்ந்து வாழும் பார்ப்பான் தவறிழைக்க மாட்டான் என்ற நம்பிக்கை...மத்தவன்லாம் தவறிழைப்பான் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம் அப்படியும் ஒரு நம்பிக்கை...என்ன பாழாய்ப் போன,பித்தலாட்டமான,பாரபட்சமான நம்பிக்கையோ!?),இன்ன தொழில் தான் இவன் பண்ண்னும்,மீறி வேற தொழில் பண்ணா தண்டனை அதுலையும் வேறுபாடு....இது தான் உங்க பார்வையிலெ வாழ்க்கையெ நெறி படுத்துமோ!? இது தான் நீதியோ!?கால்ல பொறந்ததா சொல்லப்பட்றதுக்கு என்னலாம் வியாக்கியானம் கொடுக்குறீங்க!? நல்ல சமாளிப்பு, எல்லாரும் சம படைப்புனா ஒரே இடத்துலெ இருந்தே பெறக்குற மாறி சொல்லிருக்கலாமேங்க!? இதுலையே வேறுபாடு தெரியுதே!? மொத்ததுலெ எவனும் வயித்துலெ பொறக்கல(பெரியார் வேடிக்கையா சொன்ன மாறி தமிழந்தான் சரியா வயித்துலெ இருந்து பொறந்தான் போல!?),என் கருத்து சாதியின் அடிப்படையெ வருணம் தான்,மனுவிலேயே அதுக்கு ஆதாரம் இருக்கு,மேலும் இது தொழில் அடிப்படை, நெறிபடுத்துதல் அப்படினா உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,இழி பிறப்பு அப்படிலாம் இருக்கக்கூடாது இல்லையா? ஆனால் மனுவில் அவ்விதமே இருக்கிறது....மனுவின் சில நீதிகளை(!?)பார்ப்போம்

உயிர்களின் தோற்றத்தில் வருன் நால் வருண ஒழுக்கத்தில் சூத்திரர் கடமை(74)யென சொல்லப்படுவது பிராமணர்,சத்திரியர்,வைசியர் ஆகிய மூவருக்கும் பொறாமையின்றி பணி புரிதல் முதற்கடன்.பிராமணன் பிரம்மாவின் தூய்மையான முகத்திலிருந்து முதன்முதலில் தோன்றினான்,அதனால் அவன் பிறவியிலேயே வேதங்கள் பெற்றவனாகிறான்,அகவே அவன் மனித படைப்புகள் யாவற்றிலும் மேலானவனாகிறான்(77)உயிர்களில் மனிதர் சிறந்தவர்,மனிதர்களில் பிராமணர் சிறந்தவர்(79)மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட சமய,சமூக அறங்களை காத்து, நிலைப்படுத்துவதற்காகவே,உயிர்கள் அனைத்தினும் பிராமணன் தலைமை வாய்ந்தவனாக படைக்கப்பட்டான்(82)பிராமணன் முதற்பிறவி உயற்பிறவியான அத்தகுதியினால் பிராமணன் பிரம்மாவின் படைப்புலகில் காணப்படும் அனைத்து செல்வத்தையும் தனக்கென கொள்ள தக்க் உரிமை படைத்தவனாகிறான்(83)பிராமணன் மற்ற மூவரிடமிருந்தும் உணவு,உடை,பொருள் மற்றெதுவானாலும் அவன் தன்னுடையதைத்தான் அவர்களிடமிருந்து பெறுகிறான்.ஏனெனில் பிராமணின் உடமையை தான் அம்மூவரும் வைத்து வழ்ந்து வருபவர்களவர்.(84)இதற்கு மேலும் நம்மால் சொல்ல முடியுமா இப்பிரிவுகள் நெறிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் தான்,ஏற்றத்தாழ்வற்ற,உயர்வு,தாழ்வு,இழினிலை பாரா பிரிவுகள் என்று?????

அறத்தில் வரும் பிராமணன் தாக்கப்படல் பின்வரும் நீதிகளை வலியுறுத்துகிறது...263.பிராமணரை சூத்திரர் கையாலேனும்,கருவியாலேனும் தாக்கினால்,பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ அடித்தவனின் அந்தந்த உறுப்புகளை குறைப்பதே தக்க தண்டனையாகும்264.பிராமணனுக்கு சமமாக ,அகங்காரத்தோடு அமர்கிற சூத்திரனுக்கு உயிருக்கு தீங்கின்றி தண்டனை தருக.இடுப்பில் சூடு போடுக.உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக.ஊரை விட்டு துரத்திடுக.265.பிராமணன் மீது காரிஉமிழ்பவன் உதடுகளை அறுத்திடுக. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டிடுக.மலத்தை வீசினால் ஆசன பகுதியை அறுத்து விடுக.266.பிராமணனின் குடுமி,மீசை,தாடி,கழுத்து குறி முதலியவற்றை பற்றியிழுத்தால் சூத்திரன் கையை துண்டித்திட வேண்டும்.267.சூத்திரன் பிராமணனை கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும்,பிராமணின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்தங்குல நீள கம்பியை பழுக்க காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணித்திடவும்268.பிராமணனை பார்த்து இதனை செய் என்று அகந்தையோடு சூத்திரன் கட்டளையிட்டால் அவன் வாயிம் எண்ணையை கொதிக காய்ச்சி ஊற்ற வேண்டும்.இப்படிப்பட்ட நீதிகள்(!?)சூத்திர வருணத்தாருக்கு மட்டுமல்ல வேறெந்த வருணத்தாருக்கும் இல்லை அதாவது அவர்களை இழித்து பேசும் பிராமணனுக்கு..... நன்றாக நெறிபடுத்துகிறீர்கள்.....என்னே சமூக நீதி!?மேலும் மற்றுமொரு உயரிய நீதி...வருணங்கள் பொருளடக்கத்தில் வரும் சண்டாளர் தொழிலில்...33.இழி பிறப்பாளன் பிராமணன் பணியை புரியும்போதும் அவன் இழி பிறப்பாளன் தான்.பிராமணன் இழி தொழில் யாது புரிந்தாலும் அவன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான்.அவன் உயர் பிறப்பு,உயர் பிறப்பு தான்.ஏனெனில் பிரம்மனின் ஆணை அவனை அவ்வாறு நிலை படுத்துகிறது.அடுத்து சாதியை பற்றி கூறும் மனுவின் நீதிகளை பார்ப்போம்

பொருளடக்கம் வருணங்களில் வரும் சாதிகளின் தோற்றம் நீதி சொல்வதென்ன என்பதையும் பார்ப்போம்...9. நால் வருணத்தவரும்,கற்பறம் தவறாதலாலும் ,தத்தமது கோத்திரத்திலெயே மணம் கொள்வதாலும் சாத கருமங்கள் ஆற்றாமையாலும் சாதிகள் தோன்றுகின்றன(வேறு கோத்திரத்தில் மணம் கொள்வதால் சாதிகளை அழிக்கலாம் என்ற நீதியை இதன் மூலம் மறைமுகமாக அவர் அறியாமலெயே தெரிவித்த இந்த நீதிக்காக வேண்டுமானால் நன்றி சொல்லலாம் மனுவிற்கு:-) )இதே பொருளடக்கத்தில் சண்டாளர் வாழ்க்கையில் வரும் 38ஆம் நீதி இவ்வாறு ஆரம்பிக்கிறது....சாதி கலப்பு மறைவானதே.சங்கர சாதியார் நால் வருணத்தவரை போலவெ வெளியில் தோன்றினும் தொழில் கொண்டு சாதி அறியலாம்......இவை போன்று பல நீதிகளை எடுத்துரைக்கலாம்....மொத்ததில் ஒரு சாதிக்கு ஒரு நீதி பிற சாதிக்கி மறு நீதி இதுவே மனு நீதி...வருணங்களே சாதியின் மூலம்.பிராமணர்கள் த்ங்களை உயர் நிலையில் நிறுத்திக் கொள்ள அவர்களால் எழுதப்பட்ட அவர்களுக்கான நீதியே அது!!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான எஸ்.கே.பிஸ்வாஸ் அவர்கள் ‘பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய மிகச்சிறப்பான மார்க்சிய ஆய்வுநூல் ஒன்று தலித்முரசு இதழில் தமிழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த ஆய்வாளர் கூறுகிறார்,மனுவிற்கு சம்பந்தமாக உள்ள சில பகுதிகளை மட்டும் இங்கே பதிய விழைகிறேன்...“இந்து மதம், ஒரு சமத்துவமற்ற மதம். வெறுப்பு, பயங்கரவாதம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றின் ஆதரவோடு ஒடுக்குமுறையின் முன்னோடியாக திகழும் இந்து மதம், தனது ஆற்றல் மிக்க எதிரிகள் அனைத்தையும் கடத்தி ஆரியமயமாக்குவதன் மூலமே பல்லாண்டு காலமாக நிலைத்து வருகிறது. இந்தத் திட்டமே உள்வாங்குதல் என்று அழைக்கப்படுகிறது. ஆரிய படையெடுப்பினை எதிர்த்து தனது தாய் நாட்டை காக்கப் போரிட்டபோது வேத படையெடுப்பாளரான போர்த்தலைவன் இந்திரனால் கொல்லப்பட்ட பூர்வகுடி நாயகனான கிருஷ்ணனை பார்ப்பனியம் ஆரியமயமாக்கியது. நாட்டுப்பற்றுமிக்க கிருஷ்ணா, வெளிநாட்டு ஊடுருவாளரான இந்திரனை எதிர்த்து பத்தாயிரம் போர் வீரர்களுடன் போரிட்டார். இறுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். கர்ப்பமாக இருந்த அவரது மனைவிகள் ஆரிய போர்த் தலைவனான இந்திரனால் கொல்லப்பட்டனர். பிற்காலத்தில் இந்த புகழ் பெற்ற மண்ணின் தலைவனின் பெயரால், சதுர்வர்ண தத்துவம் கீதையில் போதிக்கப்பட்டது. ரிக் வேத காலத்தின் தொடக்கத்தில், பெரும்பான்மை மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த பூர்வகுடித் தலைவனான மனு ஒரு கிராம தலைவராக இருந்தார். அவரது ஆளுமை கடத்தப்பட்டது. பிருகு என்ற பார்ப்பனன் அளித்த சட்டங்கள், மனுவின் பெயரில் எழுதப்பட்டு, மனு ஸ்மிரிதியில் சட்டமாக்கப்பட்டு, இந்தியாவின் பூர்வகுடி மக்களை சுரண்டி அடிமைப்படுத்தப் பிரச்சாரம் செய்யப்பட்டன. மண்ணின் போர்ப்படையை வீழ்த்தவும், இந்திய உழவர்களிடையே பார்ப்பனியத்தை பிரச்சாரம் செய்யவும் நடைமுறைப்படுத்தவும் அவர் ஆரியமயமாக்கப்பட்டார். புரட்சியாளரான அசுர மன்னன் பாலாவின் மகனான அக்னியை, இந்திரனின் முகாமில் சேர்ந்து, நாட்டிற்கு துரோகியாக நடிக்க காரணமாக இருந்தது மனுவாகும். ஆரிய காலத்திற்கு முந்தைய சிந்து-ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதிகளில் நிலவிய, மண்ணின் மதமான பௌத்தத்தை பிரச்சாரம் செய்த, பழமையான சிரமண பண்பாட்டை ஏற்றுக் கொண்ட சாக்கிய பழங்குடியைச் சேர்ந்த கவுதமரையும் உள்வாங்கியது.

புத்தர் இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் 9-ஆவது அவதாரமாக ஆக்கப்பட்டுள்ளார். பார்ப்பனியம் முகமது மற்றும் இஸ்லாத்தையும் கூட கடத்த முயற்சித்தது (அலோபனிஷத், பவிஷ்ய பூரண் ஆகியவற்றை பார்க்கவும்) சூத்திரரான சிவாஜி சிவசேனை உருவாக்கியதன் மூலம் மிக செறிவாக இந்துமயமாக்கப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கரை இந்துமயமாக்கி 'ஒரு உண்மையான ஆரியன்” எனவும், விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் (கல்கி) எனவும் வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”இப்படிப்பட்ட ஆரியப் படையெடுப்பிற்கும், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் தமிழர் வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஏராளமான ஆதாரங்களில் சிலவற்றை ஏற்கனவே பார்த்தோம். பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிடர் என்ற சொல்லும் இப்படித்தான் ஆரியர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். அந்த நூலின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் கி.மு.வில் இராஜதரங்கினி காலத்துக்கு முன்பாக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட மனுதரும சாஸ்திரத்தில் திராவிடர் என்றால் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்த அந்த மனு சாஸ்திரத்தை 1919 இல் திருவைந்திரபுரம், கோமாண்டூர் இராமாநுஜாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்து ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த நூலில் திராவிடர் பற்றிய குறிப்புகள் உள்ளன.துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயந முதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச் சொல்லப் படுகிறார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 20)விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)பிராமணிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மையையடைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்கனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய்விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44)மேற்கண்ட ஸ்லோகங்களின்படி க்ஷத்திரிய ஜாதிகளுக்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியவர்களும் - க்ஷத்திரிய ஜாதிகென்ற வரையறைகளை மீறியவர்களும் சூத்திரர்கள் ஆகி விடுகிறார்கள். அந்த சூத்திரர்கள் திராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஆண்ட தேசங்களில் ஒன்று திராவிடம் என்றுதான் மனுதருமம் கூறியுள்ளது.

மனு தர்மத்தையோ, ஸ்லோகங்களையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. புராணங்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, ஆய்ந்தறிந்து, “புராணங்களில் வரலாற்று உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன” என்று கண்டுபிடித்த வரலாற்றுப் பேராசிரியருக்கு மேற்கண்ட மனுதருமத்தில் இருக்கும் வரலாற்று உண்மை தெரியாதது எப்படி?

No comments: