ஒரு பாதிரியார்... என் உறவினர். எந்த வித மதமாற்ற செயலும் புரியாமல் பெங்களூருவில் குடிசை வாழ் குழந்தைகளுக்காக இலவச கல்வியை அவரது அமைப்பின் மூலம் கொடுக்கிறார். தன் பிரசங்கத்திலும் பைபிள் வாசகங்களை இக்கால சமூக பிரச்சினையுடன் கலந்து பேசி புரிய வைப்பார்.
மற்றொரு பாதிரியார்... அப்பாவின் மாணவர். வேடந்தாங்கல் பங்கில் பணியாற்றிய பொழுது தலித் கிறித்துவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் வன்னிய கிறித்துவர்கள் தடுத்த பொழுது அந்த தலித் மக்களுக்காக போராடி உள்ளே நுழைய செய்தார்.
இவர்கள் இருவரும் மத நம்பிக்கை உடைய மத வாதிகள் தான். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தான். ஆனால் எதார்த்த வாதிகள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாத பகுத்தறிவு ஆன்மீக வாதிகள்.
இவர்களை போன்று இக்காலத்திற்கு தேவையான மதக் கருத்துக்களை தற்கால பிரச்சினையுடன் தொடர்பு படுத்தி அதை தீர்க்க முயலுபவர்கள் தான் மதத்திற்கு தேவையானவர்கள்.
இவர்களால் தான் மதம் சீர்படும், மனிதம் மேம்படும்!!!
No comments:
Post a Comment