பூமி நிற்கத் தான் செய்கிறது. அது நகரவில்லை. தனது பதிலை நியாயப்படுத்த அவர் ஒரு உதாரணமும் அளித்தார்.
ஒரு டம்ப்ளரை கையில் எடுத்துக் கொண்ட அவர், நாம் எல்லாம் தற்போது எங்கு உள்ளோம்? நாம் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்கு விமானத்தில் செல்கிறோம். இது தான் பூமி என்று வைத்துக் கொள்வோம் என அந்த டம்ப்ளரை காண்பித்தார். பூமி ஒரு பக்கம் சுற்றுகிறது என்றால் விமானம் வானிலேயே நின்று கொண்டிருந்தால் கூட சீனா விமானத்தை நோக்கி வரும்.
பூமி மறுபக்கமாக சுற்றுகிறது என்றால் விமானம் சீனாவை அடையவே முடியாது. ஏனென்றால் சீனாவும் சுற்றிக் கொண்டிருக்கும் அல்லவா. அதனால் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்றார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மத குரு ஷேக் அல் கைபாரி.
# அந்த காலத்திலிருந்தே நம்மை குழப்புவது தான் இந்த மத வா(வியா)திகளின் வேலை.
சாதாரணமாக பூமியோடு சேர்ந்து அதனை சார்ந்த வளி மண்டலமும் பூமி சுற்றும் வேகத்திலேயே சுற்றுகிறது. அதனால் தான் அந்த வளி மண்டலத்தோடு சேர்ந்து விமானமும் நகர்கிறது அதற்கான வேகத்தையும் கணக்கில் கொண்டு.இவையனைத்தும் ஒரு சேர இருப்பதால் தான் நம்மால் நாம் சேர விரும்பும் இடத்தை அடைய முடிகிறது. வளி மண்டலத்திற்கு மேலே இதே போல் இருப்பதில்லை ஏனென்றால் அங்கு வளி மண்டலமும் இல்லை, அதுவும் பூமியின் வேகத்தில் சுற்றாது மேலும் புவி ஈர்ப்பு விசையும் இல்லை.(பூமி தன்னை தானே சுற்றும் வேகம் கிட்டத்தட்ட 1040 mph , ஒரு விமானத்தின் சராசரி வேகம் 500 - 600 mph.)
நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளவில்லையென்றால் ஒரு காலத்தில் பூமி இந்த வேகத்தில் சுற்றினால் நாம் விழுந்து விட மாட்டோமா, பூமி உருண்டை என்றால் அதன் அடி பாகத்தில் இருப்பவர்கள் ஏன் கீழே விழாமல் இருக்கிறார்கள் என்று புவி ஈர்ப்பு விசையை உள்வாங்காமல் நம்மை முட்டாளாக்கியது போல இன்றும் நம்மை முட்டாளாக்குவதற்கு மத வியாதிக் கூட்டம் தயாராக நின்று கொண்டிருக்கிறது!!!
No comments:
Post a Comment