இது பல முறை கேட்ட புராண இதிகாச கதை அல்ல, ஒரு உண்மை சம்பவம்!!!
எங்கள் அலுவலகத்தில் நடந்த உண்மை சம்பவம், இந்த சம்பவம் யார் மனதையும் புண்படுத்தினால் அதற்கு நானோ என் எழுத்துக்களோ இல்லை முக நூலோ பொறுப்பாக முடியாது!? நான் வேலை பார்க்கும் Account வட ஹிந்தியாவை சேர்ந்ததால் இங்கு Client Place-இல் வட ஹிந்தியர்கள் அதிகம். சென்ற இரண்டு முறையும் தீபாவளியை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.இது ஹிந்தியர்களின் பண்டிகை என்கின்ற தம்பட்டம் வேறு. நான் எப்பொழுதும் போல கலந்து கொண்டதில்லை. பொங்கலை மட்டும் என்னால் முடிந்த அளவு அலுவலகத்தில் கொண்டாடுவேன் அதாவது அலுவலகத்தில் பொங்கலை வைத்து அது பற்றின குறிப்பை எழுதி வைத்து தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புவது.(முக்கியமாக இங்கிருக்கும் Client-ற்கு...) இந்த முறை எங்கள் Team-இல் தீபாவளியை சிறிய அளவில் கொண்டாடலாம் என்று முடிவெடுத்து ஒவ்வொருவரும் ஏதாவது செய்து கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனக்கு Chicken Briyani மற்றும் Veg Briyani. சரி தப்பிக்க முடியாது...அவர்கள் வட ஹிந்தியர்கள் அவர்களின் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் அதில் கலந்து கொள்கிறோம் என்கின்ற அளவில் ஒத்துக் கொண்டு விட்டேன். Indian Ethinic Wear போட்டு வர வேண்டும் என்று கூறினார்கள்... ஆரம்பிச்சுட்டானுங்கடா என்று நினைத்துக் கொண்டு அன்றைய தினம் காலையில் என்ன ஆடை அணியலாம் என்று தேடினேன்... கண்ணிலும் கையிலும் அகப்பட்டது அந்த கறுப்பு T-Shirt(!), போட்டுக் கொண்டு வந்துவிட்டேன். ஏன் தீபாவளியை கொண்டாடுகிறோம் என்று இராமாயண கதையை You Tube-இல் போட்டார்கள்... நரகாசுரன் கதை என்ன ஆச்சு என்று அருகில் இருந்தவனிடம் கேட்டேன்... நிறைய கதை இருக்கும் நாங்க இந்த கதையை தான் நம்புறோம் என்றான், சரி என்றேன். இங்கிருந்த Client ஒருவர் இது எப்பொழுது நடந்தது என்று கேட்டார். என் Team நபர் மிகவும் ஆர்வக் கோளாறாக ரொம்ப வருடம் முன்பு,1 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என்றான். எனக்கு தூக்கி வாறிப் போட்டது, எனக்கே அப்படி என்றால் இங்கிருக்கும் Client-ற்கு!? அப்படியென்றால் Dinosaur-லாம் இருந்திருக்கக் கூடுமோ என்று ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள், நிலைமையை புரிந்து கொண்ட Project Manager இல்லை இதை வெறும் கதை என்றும் சிலர் கூறுவர் என்று பேச்சை மாற்ற முயன்றார். அந்த Team நபர் விடுவதாக இல்லை.... இல்லை கண்டிப்பாக பல ஆண்டுகள் முன்பு...என்ன சரியா என்று என்னை கோர்த்து விட்டான். இராமாயணப்படி 27 இலட்சம் ஆண்டுகள்(திரேதாயுத காலம்) என்று அவர்கள் சொல்கிறார்கள்...Homo Sapiens தோன்றி 35000 ஆண்டுகள் என்று அறிவியல் சொல்கிறது...இறுதியாக இந்தியா - இலங்கை கடற்கோள் பிரிந்தது 17000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சொல்லப்படுகிறது(இப்பொழுது பிரிந்த ஹிந்தியா - இலங்கை கடற்பரப்பில், ஏன் 27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில்பாலம் கட்ட வேண்டும் என்பது அடுத்த கேள்வி.). சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியது 4500 ஆண்டுகளுக்கு முன்பென ஆராய்ச்சி சொல்கிறது. (அப்படியெனில் 27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னேறிய நாகரிகம் எப்படி சாத்தியம் என்பது மற்றுமொரு கேள்வி).அப்படியெனில் இராமாயணம் என்பது 4500 ஆண்டுகளுக்கு உள்ளாக எழுதப்பட்ட ஒரு கதையாக இருக்கக் கூடும் என்று கூறினேன். கதை முற்றும். |
Monday, March 17, 2014
தீபாவளி கதை
பிரிவு - சாதி - புரிதல்
நான் :- ஹிந்து மதத்தில் இருக்கும் பெரிய குறைபாடே சாதி தான், அதற்காக தான் பெரியார் ஹிந்து மதத்தை அதிகமாக விமர்சித்தார். அவரின் நாத்திகம் சாதிய அடிப்படையிலான இறை மறுப்பு நாத்திகம்.
அ.அ (அடுத்தாத்து அம்பி!) :- கிறித்துவத்திலும்,இசுலாமிலும் தான் சாதி இருக்கிறது.
நான் :- எப்படி?
அ.அ :- கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்ட் மற்றும் ஷியா, சன்னி.
நான் :- வழிபாட்டு அடிப்படையிலான நேர்க்கோட்டு பிரிவுக்கும், பேதம், தீண்டாமை வளர்க்கும் செங்குத்து சாதி கட்டமைப்பிற்கும் வித்தியாசம் இல்லை?
அ.அ :- உங்களுக்கு அது பிரிவு, எங்களுக்கு அது சாதி!!!
நான் :- சரி அப்படியென்றால் மதம் மாறியும் சாதி மாறாமல் முன்னிறுத்தப்படும் கிறித்துவ நாடார், கிறித்துவ வன்னியர், கிறித்துவ தலித் என்பவை ?
அ.அ :- அதுவும் சாதிகள் தான்!
நான் :- ம்ம்ம். அப்படியென்றால் சைவம், வைணவம் என்பவை சாதிகளா இல்லை ஹிந்து சமய பிரிவுகளா?
அ.அ :- அவைகள் மதக் கோட்பாடுகள், பிரிவுகள்.
நான் :- வழிபாட்டின் அடிப்படையில் அவைகள் பிரிவுகள் என்றால்... அதே வழி பாட்டு முறை அடிப்படையிலான கத்தோலிக்க, பிராட்டஸ்டண்ட் மற்றும் ஷியா மற்றும் சன்னி பிரிவுகள் மட்டும் எப்படி சாதிகளாகும்???
அ.அ :- இல்லை அவைகள் சாதிகள் தான்!
நான் :- ஒரு கத்தோலிக்க கிறித்துவன் அங்கு பாதிரியாக தடையில்லை, பிராட்டஸ்டண் பாஸ்டர் என்பதற்கும் அப்படியே... இசுலாம் மதத்திலும் அப்படியே. ஆனால் தமிழ் நாட்டின் ஹிந்து கோயில்கள் என்று அழைக்கப்படும் அனைத்து கோயில்களிலும் அதற்கான ஆகம விதிகளை கற்றுத் தேரும் பட்சத்தில் எந்த சாதியினரும் அர்ச்சகராக இன்னும் தடைகள் இருக்கிறதே... அது ஏன்? ஒரு கிறித்துவன் அவன் கோயிலுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், இசுலாமியனுக்கும் அப்படியே...
ஒரு ஹிந்து அவன் எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள் சென்று கடவுளை காண, வழிபட முடியுமா??? இது தானே பிரிவுக்கும் சாதிக்குமான வேறுபாடு.
ஒரு ஹிந்து அவன் எந்த சாதியாக இருந்தாலும் கருவறைக்குள் சென்று கடவுளை காண, வழிபட முடியுமா??? இது தானே பிரிவுக்கும் சாதிக்குமான வேறுபாடு.
அ.அ (அம்பிகள்) :- டேய் அந்த பயலே இந்த பயலே யாருடா நீ...மிஷனரியா, அரேபிய அடிமையா...பொறம்போக்கு நாயே, ராமசாமி அடிவருடியா நீ.....etc etc etc
முருகன் தாத்தா...
உங்கள் வாழ்க்கையில் இவரை போன்றதொரு நபரை கடந்த நபராகவும் இவர் இருக்கலாம்!!!
டேய் முருகன் வரான்டா...இப்படி தான் அவரை விளிப்போம், நாங்கள் மட்டுமல்ல எங்கள் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் வரை... (அது வரை தான் எங்கள் பள்ளியில் இருந்தது.)
அப்பொழுது அவருக்கு வயது 70 இருக்கலாம். எப்பொழுதும் ஒரு குச்சியை கையில் வைத்திருப்பார். எங்கள் பள்ளியில் அவருக்கு என்ன வேலை என்றெல்லாம் அப்பொழுது நாங்கள் சிந்தித்தது இல்லை.பள்ளியில் இருந்தார், பள்ளியிலேயே தான் இருந்தார்.
நல்ல கரிய உயரமான உருவம். எப்பொழுதும் வெள்ளை சட்டை,வெள்ளை வேட்டியில் தான் இருப்பார்,அவரைப் பார்த்தாலே ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும் உருவம்.அந்த பயத்திற்கு காரணம் அவரின் உருவத்தை விட, அவரின் செய்கைகளில் இருந்தது. எப்பொழுதும் உக்கிரமான கோபத்துடனும்,அதட்டலுடனும் தான் இருப்பார்.
எவரையும் அவர் அருகில் மிக நெருக்கமாக பார்த்ததில்லை. ஆசிரியர்கள் நெருக்கமாக வராததற்கு என்ன காரணம் என்று அப்பொழுது புரியவில்லை, நாங்கள் போகாததற்கு காரணம் பயம் ஒன்று தான். ஆனால் சமயத்தில் பய உணச்சி கூட கேலி செய்யும் செயலாக போய்விடும் கடவுள் போல! அது போல அவரிடம் வம்பிழுத்து ,அவர் துரத்தி வரும்பொழுது பிடிபடாமல் ஓடுவது எங்களுக்கு ஒரு வேடிக்கை/வாடிக்கை!
காலமும், சூழலும் எங்களை வேறொரு பள்ளிக்கு தள்ளியது... நானும் நண்பனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களின் பழைய பள்ளிக்கு சென்றோம். அன்று சனிக்கிழமை என்பதாக நினைவு. எங்கள் பள்ளியை பார்த்தோம், இப்பொழுது நாத்திகனாக இருக்கும் என்னுடைய பிள்ளையார் சுழியை பார்த்தேன்.அந்த சுழிக்குள் என் நினைவுகள் சுழன்றது. எங்கள் வகுப்பறைகள், சத்துணவு அறை, இறை வணக்க மேடை, தலைமை ஆசிரியர் அறை, குடி தண்ணீர் குடிக்கும் இடம், பள்ளியை போலவே வறண்டு கிடக்கும் அந்த கிணறு. அவைகள் எல்லாம் அளவில் சிறியவைகளாக தெரிந்தன... இல்லை வயதில், அனுபவத்தில் நாங்கள் வளர்ந்திருந்தோம்.
அவரையும் பார்த்தோம்... அவரே தான் முருகன்.
அருகில் சென்று "என்ன தாத்தா எப்படி இருக்கீங்க..." என்று விளித்தோம்!
"யாருப்பா..." என்றார் மிகவும் சாந்தமான குரலில்.
"இந்த ஸ்கூல்ல தான் தாத்தா படிச்சோம், சும்மா பாக்க வந்தோம்..." என்றோம்.
"அப்படியாப்பா..." என்றார். மேலும் சில விடயங்கள் பேசினோம், நினைவில் இல்லை அவரைத்தவிர...
நாங்கள் அவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தோம், பயம் இல்லை, பரிதாபம் இருந்தது. அப்பொழுது அவரின் கையில் குச்சி இல்லை... இப்பொழுது நினைத்து பார்க்கிறேன்... பழைய நாட்களில் அவர் அந்த குச்சியை வைத்து எங்களை அடித்ததாகவும் நினைவில் இல்லை! மனிதர் என்ன ஒரு பொய்யான அதட்டலுடனும், கோபத்துடனும் வாழ்ந்திருக்கிறார்....ஒரு வேளை அது அவருக்கு பள்ளி நிர்வாகம் விதித்த கட்டளையாக இருக்கலாம், வயிற்றிற்காக அவரும் ஏற்றுக் கொண்ட வேடமாகவும் இருக்கலாம்.
விடை பெற்றோம்... நினைவுகளை அங்கேயே மற்றுமொருமுறை விட்டுவிட்டு.....அந்த நினைவுகளில் முருகன் தாத்தாவுக்கு முக்கியமான இடம் இருந்தது.
இப்பொழுது இங்கு அமெரிக்காவிலிருந்து அம்பத்தூரில் இருக்கும் அந்த பள்ளியையும் அங்கு இருந்த முருகன் தாத்தாவையும் நினைக்கிறேன். நம் வாழ் நாளில் நாம் சந்திக்கும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயர், நினைவுகள் அப்படியே நாம் இறக்கும் வரையில் தங்கிப் போகும் காரணம் தெரியாமலேயே... முருகன் தாத்தா அப்படி ஒரு கதாபாத்திரம்.
Tuesday, March 4, 2014
ஏன் படைப்பு கோட்பாட்டை ஆன்மீக / ஆத்திக அடிப்படையில் இல்லாமல் அறிவியல் அடிப்படையில் ஏற்கிறேன்?
பொருள் - கருத்து முதல் வாத இறை நம்பிக்கையாளர்களுக்கு / மறுப்பாளர்களுக்கு...
ஆத்திகம் கடவுள் இருப்பை நிரூபிக்கவில்லை, உணர மட்டுமே சொல்கிறது., இருப்பதற்கான நிரூபணத்தை ஆத்திகம் தராததால் அறிவியலிலும் அதை மறுப்பதற்கான அவசியம் இல்லை.
அதே சமயம் உலகம்,உயிர் தோன்றியதற்கான பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் நிரூபிக்கவில்லை, கோட்பாடு அளவில் தான் கூறுகிறது.
இப்படி இருக்க உலகம், உயிர் தோன்றியதை ஏன் ஆத்திக கோட்பாட்டில் இல்லாமல் அறிவியல் கோட்பாட்டில் ஒத்துக் கொள்ள என் பகுத்தறிவு கூறுகிறது?????
இங்கு கிறித்துவ அல்லது இசுலாமிய கோட்பாடுகளை எடுத்துக் கொள்ளலாம், இந்த விடயத்தில் ஹிந்துக் கோட்பாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை....அவர்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால்!!!
ஆத்திகம் கடவுள் இருப்பை நிரூபிக்கவில்லை, உணர மட்டுமே சொல்கிறது., இருப்பதற்கான நிரூபணத்தை ஆத்திகம் தராததால் அறிவியலிலும் அதை மறுப்பதற்கான அவசியம் இல்லை.
அதே சமயம் உலகம்,உயிர் தோன்றியதற்கான பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் நிரூபிக்கவில்லை, கோட்பாடு அளவில் தான் கூறுகிறது.
இப்படி இருக்க உலகம், உயிர் தோன்றியதை ஏன் ஆத்திக கோட்பாட்டில் இல்லாமல் அறிவியல் கோட்பாட்டில் ஒத்துக் கொள்ள என் பகுத்தறிவு கூறுகிறது?????
இங்கு கிறித்துவ அல்லது இசுலாமிய கோட்பாடுகளை எடுத்துக் கொள்ளலாம், இந்த விடயத்தில் ஹிந்துக் கோட்பாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை....அவர்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வர முடியாத காரணத்தினால்!!!
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது...
கிறித்துவம், இசுலாம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது...(இரண்டிற்கும் ஒரே மூலம் தான். இறைத்தூதர்கள் என்கின்ற நிலையிலிருந்து தான் இரண்டும் வேறுபடுகிறது)
சரி விடயத்திற்கு வருவோம்...
கிறித்துவம், இசுலாம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது...(இரண்டிற்கும் ஒரே மூலம் தான். இறைத்தூதர்கள் என்கின்ற நிலையிலிருந்து தான் இரண்டும் வேறுபடுகிறது)
சரி விடயத்திற்கு வருவோம்...
1.விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அவர் எவ்வுலகத்திலிருந்து படைத்தார்???
நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாகவும், நீருக்கு மேலே வானத்தை படைத்து அதற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அவர் எந்த உலகத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்தார்??? இல்லை அந்த உலகம் விண்ணுலகம் என்றால்...அவரின் படைப்புக்கு முன்னரே,விண்ணுலகம் இருந்ததா??? ஏற்கனவே இருந்ததை அவர் மறுபடியும் படைத்தாரா???
நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாகவும், நீருக்கு மேலே வானத்தை படைத்து அதற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியென்றால் அவர் எந்த உலகத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்தார்??? இல்லை அந்த உலகம் விண்ணுலகம் என்றால்...அவரின் படைப்புக்கு முன்னரே,விண்ணுலகம் இருந்ததா??? ஏற்கனவே இருந்ததை அவர் மறுபடியும் படைத்தாரா???
2.முதல் நாள் ஒளியையும் , இருளையும் படைத்து ஒளிக்கு பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்ட கடவுள், 4-ஆம் நாள் பகலை ஆள்வதற்கு பெரிய ஒளித்திரளையும்(சூரியன்), இரவை ஆள்வதற்கு சின்ன ஒளித்திரளையும்(சந்திரன்) படைத்தாராம்.
சூரியன் இருப்பதால் தான் அது பகல் எனப்படுகிறது, அதாவது பகலின்(ஒளியின்) மூலம் சூரியன். சூரியன் இல்லாமையே , சந்திரன் இருப்பதால்(இல்லாது இருந்தும்...) தான் அது இருட்டு எனப்படுகிறது.
அப்படியிருக்க,முதல் நாள் ஒளிக்கு, பகலிற்கு மூலம் எது ??? 4-ஆம் நாள் வரை பகலை ஆண்ட மூலம் எது??? முதல் நாள் இரவிற்கு,இருளிற்கு மூலம் எது??? 4-ஆம் நாள் வரை இரவை ஆண்ட மூலம் எது???
சூரியன் இருப்பதால் தான் அது பகல் எனப்படுகிறது, அதாவது பகலின்(ஒளியின்) மூலம் சூரியன். சூரியன் இல்லாமையே , சந்திரன் இருப்பதால்(இல்லாது இருந்தும்...) தான் அது இருட்டு எனப்படுகிறது.
அப்படியிருக்க,முதல் நாள் ஒளிக்கு, பகலிற்கு மூலம் எது ??? 4-ஆம் நாள் வரை பகலை ஆண்ட மூலம் எது??? முதல் நாள் இரவிற்கு,இருளிற்கு மூலம் எது??? 4-ஆம் நாள் வரை இரவை ஆண்ட மூலம் எது???
3.3-ஆம் நாள் புற்பூண்டுகள், செடி,கொடிகளை படைத்த கடவுள் 4-ஆம் நாள் சூரியன், சந்திரனை படைக்கிறார். சூரியனுக்கும், தாவர வகைகளுக்கும் இருக்கும் சார்பு நிலையை நாம் இங்கு விவரிக்க/விளக்க தேவையில்லை, இப்படிப்பட்ட நிலையில் எப்படி தாவர இனங்கள் சூரியனுக்கு முன்பாகவே படைக்கப்பட்டு வளர்ந்திருக்க முடியும் ???
# ஆத்திகக் கோட்பாடு Out of Human Logic, அதனால் அதை பற்றி சிந்திக்கவே முடியாது என்றெல்லாம் தப்பித்துக் கொள்ள முடியாது... இந்த 3 விடயங்களும் சாதாரண ஆறறிவு படைத்தவர்களுக்கும் எட்டும், நிரூபணத்துடன் கூடிய நடைமுறை உண்மை, இந்த உண்மையை ஆத்திகம் அப்பட்டமாக புரட்டுவதன் மூலம் இது ஒரு பகுத்தறிவுக்கு ஒத்து வராத மூட நம்பிக்கையே என்கின்ற முடிவுக்கு வர முடிகிறது.
இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் ஆதாரம்/ நிரூபணம் இல்லாது இருந்தும் ஏன் படைப்புக் கோட்பாடு அறிவியல் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது இதை படிப்பவர்களுக்கு நன்றாகவே விளங்கும்!!!
Subscribe to:
Posts (Atom)