Tuesday, December 4, 2012

குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் மோடி மந்திரமா!?

1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாக இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999இல்தான் அவர் முதல்வரானார்.



1990 இல் குஜராத் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங...்களில் ஒன்றாகஇருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோதுஎட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத்திற்கு வந்தது.


மின்உற்பத்திக்குத்தேவையான கட்டுமானங்களில் 35விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில்உருவாக்கப்பட்டது.


நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49விழுக்காடு குஜராத்தில் இருக்கிறது. நாட்டின்மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப்பெரிய ரிலையன்ஸ்எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின் சோடாஉப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான்உற்பத்தி செய்யப்படுகிறது.


இவை அனைத்துமே குஜராத் முதலமைச்சராகநரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.


குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக்கூறுவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

http://articles.timesofindia.indiatimes.com/2009-01-31/edit-page/28016891_1_vibrant-gujarat-gujarat-today-narendra-modi


No comments: