Wednesday, December 5, 2012

மொழி ஆராய்ச்சி - 1


இந்திய எழுத்து மற்றும் குறியீடுகளின் வாயிலாக...


இந்தியாவின் பழங்கால எழுத்து முறை என்று பார்க்கின்ற பொழுது முதலில் வருவது பிராமி எழுத்து முறை. அசோகரின் கி.மு 3ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும், தமிழ்னாடு மற்றும் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் பிராமி எழுத்து முறை பயன்படுத்தி இருப்பதை வைத்து அதன் பழமையை நாம் யூகிக்க முடியும்.தெற்காசியா முழுவதிலும் பிராமி எழுத்து முறை பரவி இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அசோகர் கால பிராமி கல்வெட்டுகள்

பிராமி எழுத்து முறையின் மூலம் பற்றி 3 தரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

1.செமிட்டிக் எழுத்து முறையை கொண்ட ஆதிகால எழுத்து முறையான அரமேயத்திலிருந்து பிராமி எழுத்து முறை உருவாகியிருக்கலாம்.

2.ரைஸ் டேவிட் என்கின்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்து முறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறார்.

3.ஹேண்டர் மற்றும் ரேண்டர் என்கின்ற ஆங்கில மொழி அறிஞர்கள் இந்த எழுத்து முறை இந்தியாவிலிருந்து முக்கியமாக சிந்து சமவெளி குறீயிடுகளிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர்.


மேலும் சிலரோ அசோகரே இந்த எழுத்து முறையை கல்வெட்டுகளில் பொறிப்பதற்காக கண்டுபிடித்திருக்கக் கூடும் எனவும், மேலும் சில தமிழ் அறியர்களோ பிராமி என்பது தமிழ் எழுத்து முறையே என்றும் அசோகர் அதை பிராகிருதம்(வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகள் மற்றும் அதன் வழக்குகள்) எழுதக்கூடிய எழுத்து முறையாக உருவாக்கினார் என்றும் கூறுகின்றனர்.

சோழர் கால வட்டெழுத்து


கிரந்த எழுத்து முறை
 இந்த பிராமி எழுத்து முறையிலுருந்தே வட்டெழுத்து முறையும், கிரந்த எழுத்து முறையும் தோன்றியதாக கருதுகின்றனர். கிரந்த எழுத்து முறை என்பது தென்னிந்தியாவில் வடமொழியினை எழுத பயன்படுத்தப்பட்ட் ஒரு எழுத்து முறை. வட்டெழுத்து என்பது தமிழ் பிராமிக்கு மூலம். வட்டெழுத்து வழியாக வந்த தமிழ் பிராமியே தற்கால தமிழ் எழுத்துக்களுக்கு மூலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



இதனடிப்படையில் நமக்கு முன் தோன்றும் கேள்விகள்...

பிராமி எழுத்து முறை தென்னிந்தியாவிற்கு அறிமுகம் ஆகும் பொழுது இங்கிருந்த எழுத்துக்களுக்கு அல்லது குறியீடுகளுக்கு மூலம் என்ன?

தமிழிற்கு பிராமி எழுத்து முறையே மூலம் என்றால் சிந்து சமவெளி நாகரிக எழுத்துக்கள்/குறியீடுகளுக்கும் தமிழிற்கும் உள்ள சம்பந்தம் என்ன?

பிராமியின் கால கட்டம் சிந்து சமவெளி காலத்திற்கு முந்தைய காலகட்டமா இல்லை பிந்தைய கால கட்டமா?


தொடரும்...

No comments: