மனுதர்மம் - வருணாச்சிரம தர்மத்தை வற்புறுத்தி மக்களில் நான்கு சாதிகள் -பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் - உண்டு என்று உபதேசிக்கிறது.பிராஹ்மண ; சத்திரியே வைஸ்த ; த்ரயோவர்ணாத் விஜரதய;சதுர்த்த ஏகஜ திஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம ; பிராமணன் சத்திரியன் வைசியன் என்று இம்மூவரும் துவிஜர்கள். நான்காவது சாதியான சூத்திரன் ஒரே சாதி இவனுக்கு உப நயனமில்லாததால் த்விஜாதியாக மாட்டான் - மனுதர்மம்.
திருக்குறள் -மக்கள் அனைவரும் ஒரே இனந்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.
மனுதர்மம் -மாம்சம், மச்சம் சாப்பிட வேண்டும். யாகம் செய்ய வேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தர வேண்டும் என்கிறது.மத்யம், மாம்ஸம், சமீனம், சமுத்ரா மைதுனமேவச ; ஏதே பஞ்சமகாரா; ஸ்யுர் மோக்தா ஹியுகே யுகே.கள், இறைச்சி, மீன், சமுத்ரா மைதுனம் இவ்வைந்தும் மோத்திற்குச் சாதனங்கள்.
திருக்குறள் - ஜீவ இம்சையே கூடாது. மாம்சம் சாப்பிடக் கூடாது. யாகம் கூடாது என்கிறது.கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்.அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.
(மாமிசம் சாப்பிடுவது பற்றி கருத்து வேறுபாடு இருந்தாலும் ,திருக்குறளும் மனுவும் எப்படி வேறுபடுகிறது என்பதை விளக்கவே மேற்சொன்ன பதிவு)
மனுதர்மம் -பிறவியினாலேயே பார்ப்பான் உயர்ந்த சாதி என்கிறது.அனார்யமார்ய கர்மாணம் ஆர்யம் சானார்ய கர்மிணம் ; ஸம்ப்பர தார்யா ரவீத் தாதா, நஸமென நாஸமாவிதி.ஆரியன் தொழிலைச் செய்கிற அனாரியன் ஆரியனும் ஆகப்போவதில்லை. அனாரியன் தொழிலைச் செய்கிற ஆரியன் அனாரியனு மாக மாட்டான்.ஏகமேவது சூத்ரஸ்ய ப்ரபு ; கர்மஸமா திசத்?எதேஷாமேவ வர்ணானாம் சுஸ்ரூஷா மனசூயயாபொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திர னுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார்.
திருக்குறள் - பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.
மனுதர்மம் -ஒரு மனிதன் செல்வனாகப் பிறந்து சுகபோகத்துடன் வாழ்வதற்குக் கடவுள்தான் காரணம் என்கிறது. விஸ்ரப்தம் ப்ராஹ்மண சூத்ராத் த்ரவ்யோ பாதான மாசரேத் ;நஹிதஸ்பாஸ்தி கிஞ்சித் ஸ்வம் பர்த்ளு ஹார்ய யனாஹிச.சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவன் அடிமையாகப் படைக்கப்பட்டிருத்தலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனுமில்லை.
திருக்குறள் -ஒரு மனிதனை ஏழையாகப் பிறப்பித்து வருந்த வைப்பது கடவுளானால் அக்கடவுள் ஒழிய வேண்டும் என்கிறது.இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்துகெடுக உலகியற்றி யான்.மனுதர்மத்தில் -பிராமணன் சூத்திரன் என்று மக்களைப் பல சாதியினராகப் பிரித்துப் பல இடங்களில் வருணாச்சிரம தர்மம் கூறப்பட்டிருக்கிறது.வேதத்தில் வர்ணம் வருகிறது. மனு ஸ்மிருதியிலும் சூத்திரரினும் தாழ்ந்த சாதிகள் பல கூறப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் -ஒரு இடத்தில் கூட பிராமணன் சூத்திரன் என்கிற வார்த்தைகள் இல்லை. பார்ப்பான் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது- வர்ணாச்சிரம தர்ம வாசனையே கிடையாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment