இன்று பரவலாக அவாள்கள்(சொற்பமான விதி விலக்குகள் உண்டு!) முதற்கொண்டு அம்பேத்காரிஸ்ட்(விதிவிலக்குகள் மட்டுமே இதில் அட்க்கம்!) வரை கேட்பது திராவிடம் என்ன செய்து கிழித்தது...பெரியார் என்ன செய்து கிழித்தார்.... பொதுவாக அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை,மேலும் அவர்களுக்கு எதிராக இருந்தார் மற்றும் தலித் தலைவர்களோடு அவர் முனைப்பாக செயல்படவில்லை,தலித் விடுதலையை அலட்சியப்படுத்தினார் என்பது...பெரியாரும் சரி,அம்பேத்காரும் சரி சாதி எதிர்ப்புக்கு பிராமணீய ஆதிக்கம் மற்றும் இந்து மதமே மூலம் எனக்கொண்டார்கள்,அதுவே உண்மையும் கூட.அதை மறுக்கவோ/மறைக்கவோ முடியாது.அதே சமயம் அம்பேத்காரின் இந்தியா,இந்தி என்கின்ற அமைப்புக்குள் பெரியாரால் உடன்பட இயலவில்லை,அதை அவர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நீதிக்கட்சி பிற்காலத்தில் தலித் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவையும் இழந்ததை நாம் மறுக்க முடியாது ஏனென்றால் பிராமண அல்லாதாரின் ஆதிக்கம் ஒரு கட்டத்தில் தலித் மற்றும் முஸ்லீம்களை ஒதுக்குவதாக இருந்தது. அதற்காகவும் இப்பொழுது திராவிட இயக்கங்கள் தடம் புரள்கின்றன என்பதற்காகவும் தனிப்பட்ட முறையில் பெரியார் மீது வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. என்னால் முடிந்தவரை அந்த குற்றச்சாட்டுகளுக்கு இங்கே பதிலளித்திருக்கிறேன் உங்களின் விமர்சனத்திற்காக...
இப்பொழுது பெரியார் என்ன செய்து கிழித்தார் அவர் இருக்கும்பொழுது அவர் சார்ந்த இயக்கங்கள் செய்தது என்ன...அவர் இறந்த பின்பும் அதன் தாக்கங்கள் என்ன என்பதை என் மூளைக்கு எட்டிய அளவிற்கு ஒழுங்குபடுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்... சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று சாதியொழிப்பு. தந்தை பெரியார் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சாதியும் மூடநம்பிக்கையும் ஒழிந்த புதிய தமிழகத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செலவிட்டார்.
1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மாநாட்டில் சாதி, தீண்டாமை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் . அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஒன்று வருமாறு:
4(அ) மனிதநேயத்தின் அடிப்படையிலும், தேசிய முன்னேற்றத்திற்குத் தேவை என்ற முறையிலும் தீண்டாமை என்னும் நிறுவனத்தை ஒழிக்கப் பாடுபடுமாறு இம்மாநாடு அழைக்கிறது. எந்த ஒரு மனிதரும் தீண்டத்தகாதவராக, அணுகத்தகாதவராக, பார்க்கத் தகாதவராகக் கருதப்படக் கூடாது. எந்த ஒரு சமூக ரீதியான அல்லது குடியுரிமை ரீதியான பாரபட்சங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் மீதும் பிரயோகிக்கக்கூடாது. அனைத்துக் குடிமக்களுக்கும் அனைத்துவிதமான பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
தொடக்கமே சாதி எதிர்ப்பு:
சுயமரியாதை இயக்கத்தைக் காணும் முன் பெரியார் தீவிர காங்கிரசுக்காரராகவும், காந்தியப் பற்றாளராகவும் இருந்தார். ஆனால் அவர் காங்கிரசிலிருந்த காலத்திலேயே சாதியத்தையும் தீண்டாமையையும் கடுமையாக எதிர்த்தார். 1922 திருப்பூர் காங்கிரசு மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்குப் பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என முழங்கினார்.1925இல் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அரசியல் மாநாட்டில் தமிழர்களுக்குச் சாதிமுறை புதிதானது. மனுஸ்மிருதியின் வழியாகத்தான் பார்ப்பனர்களால் தமிழர்கள் மீது சாதிமுறை திணிக்கப் பட்டது. பார்ப்பனர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரர்தான் என்று பேசினார்.காங்கிரசிலிருந்து வெளியேறியபின் சாதியொழிப்புக் கருத்தில் காந்தியாருடன் கடுமையாக மோதினார். ஒருவர் தனது விருப்பப்படி எந்த ஒரு சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற காந்தியின் தவறான கருத்தை எதிர்த்தார். சாதிமுறையை ஒழிப்பது என்பது வருணாசிரம தருமத்தை ஒழிப்பதில்தான் அடங்கியுள்ளது என்ற கருத்தில் உறுதியுடன் செயல் பட்டார்
சாதி எதிர்ப்புக் கருத்தியலில் சலியாத உறுதி:
1927 திசம்பர் 4 அன்று வடார்க்காடு மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1928 தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெரியாரைப் பின்பற்றித் தத்தம் சாதிப் பெயர்களைக் கை விட்டவர்களின் பெயர்கள் குடிஅரசு ஏட்டில் வெளி வந்தன. சுயமரியாதைக்காரர்கள் தங்கள் சாதிப் பெயரைப் பயன்படுத்துவதினின்று விலகி நிற்க வேண்டும் எனப் பெரியார் குடிஅரசு ஏட்டில் வேண்டுகோள் விடுத்தார்.
1930 மே 10, 11 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிற்குப் பம்பாயைச் சேர்ந்த எம்.ஆர். ஜெயகர் தலைமை யேற்றார். அம்மாநாட்டில் ‘சாதிகளும் அவற்றின் தீய போக்குகளும் இந்தச் சமூகத்திலிருந்து சாதிய வேறு பாடுகளையும் பாகுபாடுகளையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும்’ என்பதையே காட்டுகிறது. அதன் பிறகே சமூக அமைதியும், நல்லிணக்கமும் பல்வேறு சமூகங்களிடையே ஏற்படும். சாதியொழிய வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு தொடங்கி 1944இல் சேலத்தில் நடைபெற்ற பதினாறாவது மாகாண நீதிக்கட்சி மாநாடு வரை இதே நிலைப்பாட்டில்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தாழ்த்தப்பட்டோர் சிக்கல் குறித்தும், தீண்டாமையை ஒழித்தாக வேண்டும் என்னும் கருத்துக்கு முதன்மை தந்தும் குடிஅரசு ஏடு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது.இந்துச் சனாதனவாதியும் கடைந்தெடுத்த பிற்போக்குப் பார்ப்பனருமாகிய மதன்மோகன் மாளவியா பம்பாயில் 1932 செப்டம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற “அரிஜன சேவா சங்க”த் தொடக்க விழாவில் பேசும் போது “தீண்டாமைக்கு நமது சாஸ்திரங்களில் இடமில்லை. தன்னுடன் சேரும் உபநதிகளில் அசுத்தத்தை அகற்றி நீரைத் தெளியச் செய்யும் கங்கா நதியைப் போலத் தேவ ஆலயங்கள் தன்னிடம் வரும் தீண்டாதவர்களையும் புனிதமாக்கும்” என்கிற கொழுப்பான சொற்களை வெளிப்படுத்தினார். இந்தச் சாதிவெறித் தலைவரின் பேச்சுக்குக் குடிஅரசு ஏடு (9.10.1932) தன் கடுங்கண்டனத்தை வெளியிட்டது.
பெரியாரும் தமிழகத் தலித் தலைவர்களும்:
பெரியார் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிவந்த பிறகும்கூட சுயமரியாதை இயக்கம் என்பது பரந்த அளவிலான பார்ப்பனரல்லாத சூத்திரர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று அணி என்ற அடிப்படைப் புரிதலுடனேயே செயல்பட்டார். தாழ்த்தப்பட்டோரின் விடுதலை என்பதற்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வந்தார்.பெரியார், ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பி வரும் வழியில், இலங்கையில் சில நாட்கள் செலவிட்டார். கொழும்பு ‘ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தார்’ அளித்த வரவேற்பின் போது அவர் பேசுகையில் “பாஷாபிமானம், தேசாபிமானம், மனிதாபிமானம், குலாபி மானம் என்ற சொற்களின் உட்கருத்தைப் புரிந்து கொண்டால்தான் தாழ்த்தப்பட்டோர் ஈடேற வழியுண்டாகும்” என்று கூறினார் (குடிஅரசு 6.11.1932).அவ்வரவேற்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ்.ஆர். முத்தய்யா பெரியாரது தொண்டு முழுவதும் தங்களது (தாழ்த்தப்பட்டோரது) விடுதலையையும் சுதந்தரத்தையும் அளிக்கக் கூடியது என்றும் தங்கள் சமூகம் அவரை என்றும் மறக்காது என்றும் கூறினார் (குடிஅரசு 13.11.1932).
11.11.1932இல் தமிழகம் திரும்பிய பெரியாருக்குச் சென்னையில் தரப்பட்ட முதல் வரவேற்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஆதிதிராவிடர் சங்கமும், தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படையும் ஆகும் (குடிஅரசு 27.12.1932). நாடு திரும்பியதும் பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய முதல் தலையங்கமும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனை குறித்ததுதான். (பெரியார் : சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி. இராசதுரை-வகீதா, நூல் முதல் பதிப்பு, பக்.194, 195).ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ பட்டம் வழங்கிய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் முதன்மைப் பங்காற்றிய மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்
கிளர்ச்சிகளும் போராட்டங்களும்:
1.சமபந்தி விருந்துகள்: சாதிக் கொடுமைக்கு எதிராக அந்நாளில் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத் தோழர்களால் சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1927 சனவரி 2ஆம் தேதி நாகப்பட்டனத்திலும் 1932 ஏப்பிரல் 24ஆம் தேதி கோயம்புத்தூரிலும் நடத்தப்பட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவர்க்கும் ஆதிதிராவிடத் தோழர்கள் உணவு பரிமாறினர். அனைவரும் சாதி வேறுபாடுகள் களைந்து விருந்துண்டனர்.
2.இரயில்வே உண வகங்களிலும், தனியார் உணவு விடுதிகளிலும் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளை அகற்ற சுயமரியாதை இயக்கத்தினரால் வீச்சான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது வரலாறு.எப்படி இருந்த நாடு இது? தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்து இருந்தனர்?பஞ்சமர்களும், நாயர்களும், பெரு நோய்க்காரர் களும் நுழையக் கூடாது என்று விளம்பரப்படுத்தி யிருந்தார்களே! (குடிஅரசு 3.5.1936).இரயில்வே உணவு விடுதிகளில்கூட பிராமணாள் சூத்திராள் என்று இடம் பிரித்து வைக்கப் பட்டு இருந்ததே!
1924இல் கோவை சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதிகளில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தபோது, காளிதாச அய்யர் என்ற பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் அந்த முயற்சியிலே ஈடுபட்டு, வெற்றியும் கண்டாரே! 27.1.1941 நாளிட்ட விடுதலையில் இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார்களா? என்ற தலையங்கத்திலே பிராமணன், சூத்திரர் பேத நிலையைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். தந்தை பெரியார் அவர்களின் அந்தத் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இது இரயில்வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல் எம்.எஸ்.எம். உணவு விடுதி என்ற அளவிலே இருந்தது; ஆனால் தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே விடுதிகளுக்கும் இது நடைமுறைப் படுத்தப்பட்டது. 30.3.1941-ஆம் நாளை இரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண்டாடுமாறு விடுதலை ஏட்டின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேலத்தில் கலந்து கொண்டனர் என்பது தெரியுமா?
பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் தங்களுக்குரிய உரிமைகளை அனுபவிக்க இயலாத நிலையை எதிர்த்துப் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்
கோயில் நுழைவுப் போராட்டங்கள்:1927 பிப்ரவரி 3இல் மதுரையிலும், 8ஆம் தேதி திராவிடன் ஏட்டின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலையிலும், 1929 ஏப்பிரல் 4ஆம் தேதி ஈரோட்டிலும் அதே ஆண்டு திசம்பர் 16ஆம் தேதி திருவாரூரிலும் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் குடிஅரசு ஏட்டில் விரிவாகப் பதிவாகியுள்ளனஆதிதிராவிடர் தவிர்த்து... என்று அவர்கள் போராட்டம் நடத்தியதாக குறிப்பு இல்லையே!? மேலும் வைக்கத்தில் புலையர்களுக்கும், ஈழவர்களுக்கும் சேர்ந்து கோயிலை சுற்றியுள்ள தெருவில் போராட்டம் நடத்தியவர் தானே தந்தை பெரியார்
திராவிடர் இயக்கமாகிய நீதிக்கட்சி ஆட்சியில் சமுதாய மாற்றத்திற்கான பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.அரசாங்க உத்தரவு நெ.2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி 25 செப்டம்பர் 1924.ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவை - சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத்திலுள்ள உள்ளூர் நிருவாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது. உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செம்டம்பர் 26ந் தேதி.1924ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள்பற்றியது.திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை).(9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.(எ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,
(பி) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாக இருந் தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் உயர்ஜாதி இந்துக் களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.(இது அரசாங்கத்தின் உத்தரவு - மாநில அரசு)
பி.எல்.மூர் அரசாங்க செயலாளர் தாழ்த்தப்பட்டோரைப் பேருந்துகளில் அனுமதிக் காத கால கட்டம் ஒன்று இருந்தது. இராமநாதபுரம் மாவட்ட போர்டு தலைவராக இருந்த பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (நீதிக்கட்சி) இருந்த காலத்தில் என்ன ஆணை பிறப்பித்தார் தெரியுமா?இந்த மாவட்டத்தில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது பேருந்துகளில் ஏற்றிக் கொண்டு போவதில்லை யென்றும், டிக்கெட்டில் ஆதி திராவிடர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகிறோம். இவ்வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத் தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது - ஆகவே மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கெட்டுகளில் மறுப்புவிதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசென்சு, முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம். இந்தச் சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்துக்குள் அத்தகைய விதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கெட்டுடன் ரிப்போர்ட் செய்து கொள்ள வேண்டும்.(குடிஅரசு ஈரோடு 4.5.1930 )1932ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று சென்னைச் சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் ஒடுக்கப் பட்ட மக்கள் கோயிலில் நுழைய வகை செய்யும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.அந்தக் கால கட்டத்தில் இது திராவிட இயக்கத்தின் வியக்கத்தக்க, போற்றத்தக்க சாதனை யல்லவா!
உள்ளாட்சித் துறையிலோ தனியார் நிறுவனங் களாலோ நடத்தப்பட்டு வந்த எந்தக் கல்விக்கூடம் ஆதி திராவிடர் மாணவர் மாணவிகளைச் சேர்க்க மறுத்தாலும், அவைகளுக்கு மான்ய உதவி உடனே நிறுத்தப்பட வேண்டுமென்று கூறி, மான்யம் பெறுவதற்கே இதை ஒரு முன் நிபந்தனையாக ஆக்கி, மற்ற சாதியினருடன், இப்பிள்ளைகளும் இணைந்து சமமாக அமர்ந்து படிக்கச் செய்யப்பட்டது. அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 1936இல் 9614 .
பிற்காலத்தில் கோயில் தமிழ் வழிபாட்டு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற உரிமை சட்டம் இதெல்லாம் பெரியாரின் தாக்கங்கள் தானே என்பதை மறுக்க முடியுமா???? சென்னை உயர் நீதிமன்ற முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி யாரென்று உங்களுக்கு தெரியுமா??? விடுதலையில் பெரியார் அதை பற்றி த்லையங்கம் எழுதியதும் கருணானிதி சட்ட அமைச்சர் மாதவனை அழைத்து விசாரிக்க சொன்னார், ஜஸ்டிஸ் வரதராஜன் என்கின்ற ஒரு ஆதிதிராவிடரை முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாக்கியதும் பெரியாரின் தாக்கம் தானே???? அம்பேத்கார் பெரும் புரட்ச்சியாளர் தான் அவர் படிப்பறிவிற்கு முன் பெரியார் ஒன்னும் இல்லை தான்....ஆனால் அய்யாவின் பகுத்தறிவை,போராட்டத்தை கொச்சப்படுத்தி நன்றி மறந்தவர்களாக வேண்டுமா .....? சில பார்ப்பனர்களின் வால் ஆடலாம், அதை பார்த்து இப்பொழுது புதிதாக முளைத்திருக்கும் சில தமிழ் தேசியவாதிகள் மற்றும் சில அம்பேத்காரிஸ்ட்டுகளின் த்லையும் ஆட வேண்டுமா???மேலும் திராவிட இயக்கங்களின் வரலாறே தெரியாமல் கதைப்பவர்களுக்காக...... http://www.noolulagam.com/product/?pid=4044 நன்றி.

No comments:
Post a Comment