அது என்ன ஒழுக்கம்....யார் யாரெல்லாம் ஒழுக்க சீலர் என்று சொல்லிக்கொள்கிறோமோ அவர்கள் தங்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாலே தீர்வு கிடைத்து விடும், நானும், நீங்களும்...முத்தாலிக் அண்ணா உட்பட!? :-) இந்த கருத்தும் சரி,அதை ஆதரிப்போரும் சரி ஆணாதிக்கவாதிகளே!!! ஆதரிக்காத நானும் சில சமயங்களில் ஆணாதிக்கவாதியே (என்னெ செய்ய இதுவும் சமூகம் சார்ந்த பழக்கத்தின் வெளிப்பாடே)...
ஒரு உதாரணம் சொல்றேன் ஒரு ஆம்பிள தண்ணி,தம் அடிச்சா உடல் நலக்கேடுனு சொல்ற சமுதாயம்....ஒரு பொண்ணு அதே பழக்கம் கொண்டா என்ன சொல்லும்? ஒழுக்க கேடு....இங்க எங்க இருந்து வந்திச்சு ஒழுக்கம்...உடனே கலாச்சாரம்னு ஒன்னு வரும்...அந்த கலாச்சாரம் யாரு வரையறை பண்றது...அதன் அளவீடு என்னெனு ஆராஞ்சா...கெடைக்கறது என்ன ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தானே....ரெண்டுமே உடல் நலக்கேடு தான்னு சொல்றது தானே யதார்த்தம்,உண்மை....அடுத்து கற்பு...ஒழுக்கத்தின் வேராக கலாச்சாரம்னு நம்ம வரையறை பண்ணதில்லெ இருக்கறது....இது யாரு உண்டாக்கினது....ஆணாதிக்க சமூகம் தானே...கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்னு சொல்றது தானே யதார்த்தம்,உண்மை அப்படி கற்புனு ஒண்ணு இருக்கறதா நாமெ சொல்றெ பட்சத்தில்....அடுத்து ஒரு ஆம்பிள ரெண்டு,மூணு பெண்ண வச்சிருந்தா அதுக்கு பேர்....அவன் பெரிய ஆளுய்யா...முடியுது வச்சிக்குறானு சொல்றது....ஒரு பெண் அப்படி இருந்தா அவெ பேர் பச்சையா தேவடியா....ஏன் இந்த முரண்பாடு...அவனெ தேவடியன்னு சொல்லனும் இல்லையா? அது தானே யதார்த்தம்,உண்மை. தேவதாசிகளுக்கு மட்டும் தண்டனை கொடுத்த சமூகம் இப்ப தானே அங்கெ போறவங்களுக்கும் தண்டனை கொடுக்குற யதார்த்த நிலைக்கு வந்திருக்கு...இப்ப விடயத்துக்கு வருவோம்.....
கொலைக்குற்ற்ம் என்பது பெருங்குற்றம் தான்,,,,,அதற்கு தண்டனை கிடைக்கவே வேண்டும் ஆண் செய்தாலும் சரி,பெண் செய்தாலும் சரி.ஆண்களும் பல்வேறு குற்றங்கள் புரியும் இந்த நிலையிலும் (கள்ளக்காதல் உட்பட)பெண்கள் செய்யும் குற்றங்களே இவ்விதம் விமர்சனங்களுக்கு வருவதன் காரணமும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே....பெண்கள் பிரசுரிப்பதற்கும்,வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருப்பதால்!!!பூவரசியை விமர்சனம் செய்யும்போது அவளிற்கு குழந்தை கொடுத்து,அதை அழிக்கச் செய்த அவள் காதலனையும் விமர்சிக்க வேண்டும் அல்லவா? அப்ப என்னெ சொல்லும் இந்த சமூகம்....அந்த பெண்ணுக்கு எங்கெ போச்சு புத்தினு சொல்லும்......மேலும் அது சொல்லும் அவெ தான் அவனெ வளைலெ விரிச்சுருப்பா...இந்த பொண்ணுங்களே இப்படிதான்னும் சொல்லும்....எல்லாவித விமர்சனங்களும்,அவளை நோக்கி இருக்கும் பட்சத்தில்...எவ்விதம் நாம் நியாயமான தீர்வை எட்டெ முடியும்? ஒரு குற்றம் என்று வரும்பொழுது அங்கு இருவரின் பங்கும் இருக்கிறது,இவன் என்ன செய்ய வேண்டும்,இவள் என்னெ செய்ய வேண்டும்...எதிர்காலத்தில் இவ்விதம் நிகழாமல் இருக்க ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி செய்ய வேண்டிய ஆலோசனைஹ்கள் என்னெ என்று சிந்திக்கும் போதே தீர்வு பிறக்கும்...மத்தபடி பெண்களை மட்டும் குற்றம் சுமத்தும் இந்த கருத்தோட்டத்தில் அல்ல....உதாரண்மாக FIRE என்ற படம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.....அந்த படம் வந்த போது காலாச்சாரம் போச்சு ஒழுக்கம் போச்சுனு கூப்பாடு போட்டவர்கள் பலர்....ஆண்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பையும் அந்த படம் பறை சாற்றியது....வீட்டுலெ இருக்குற பெண்கள் கண்ட கண்ட நாடகம் பாத்து கெட்டு போறாங்களாம்....வெளிய போற பெண்களும் கெட்டு போறாங்களாம்...சரி என்னெ தீர்வு...அவங்க குடும்பத்தாரோடெ சகஜமா பேசனுமாம்...எல்லாம் சரி தாங்க...எத்தன ஆம்புளைங்க அவஙளோடெ அனுசரனையா,அன்பா,புரிஞ்சுட்டு பேசுறாங்க...இதையும் நீங்க சொல்லனும் இல்லையா....குற்றமும் சரி,தீர்வும் சரி இரண்டு பக்கமும் சார்ந்தது......பெண்கள் படிக்குறாங்க,வெளிய போறாங்க அதனாலெ தான் விவாகரத்து நடக்குது அப்படினு சொல்றதும்,இந்த சம உரிமைனாலெ தான் தப்பு நடக்குறதுனு சொல்றதும் மெய்ப்பொருள் அல்ல :-) அது யார் வாய் கேட்டாலும் :-)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment