எது தமிழ் புத்தாண்டு,எது சமஸ்கிருத புத்தாண்டு,எது ஆங்கில புத்தாண்டு என்பதற்கான விடையும் விளக்கமும் இரண்டு வருட காலமாக தெரிய வந்திருக்கிறது முக்கியமாக முதல் இரண்டு புத்தாண்டுகளின் வேறுபாடு...மாற்றம் தானே மாறாதது...இந்த மாற்றத்தையும் விவாதிக்க விழைகிறேன்.
நாம் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் எதை செய்ய வேண்டும் என்பதை விட எதை செய்ய கூடாது என்பதில் தெளிவு வேண்டும்....அந்த விதத்தில் எந்த மாற்றத்தையும் வரெவேற்கலாம் தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்ற மாற்றத்தையும் கூட...சித்திரை திரு நாள் தமிழர் புத்தாண்டென கூறப்படுவதற்கான காரணத்தை பார்ப்போம்....கிருஷ்ண பகவான் 60,000 இளம் பெண்களுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாராம்,இதை பார்த்த நாரதருக்கு அவர் மேல் காமமாம்.இதையறிந்த கிருஷ்ணன் நாரதரை யமுனை ஆற்றில் மூழ்கச் சொன்னாராம்,மூழ்கி எழும்பொழுது பெண்ணாக உருமாருகிறார் நாரதர், நாரதருடன் கிருஷ்ணன் 60 ஆண்டுகள் கலவியில் கூடி பெற்றுடுத்த 60 பிள்ளைகளின் பெயர் பின்வருமாறு.....
பிரபவ,விபவ,சுக்கில,பிரமோதூத,பிரசோத்பத்தி,ஆங்கிரச,ஷீமுக,பவ,யுவ,தாது,ஈசுவர,வெகுதானிய,பிரமாதி,விக்ரம,விஷூ,சித்ரபானு,சுபானு,தாரண,பார்த்திப,விய,சர்வஜித்,சர்வதாரி,விரோதி,விகர்தி,கா, நந்தன,விஜய,ஜெய,மன்மத,துன்முகி,ஏவிளம்பி,விளம்பி,விகாரி,சார்வரி,பிலவ,சுபகிருது,சோபகிருது,குரோதி,விஸ்வாவசு,பரபவ,பிலவங்க,கீலக,சவ்மிய,சாதாரண,விரோதிகிருது,பரிதாபி,பிரமாதீச,ஆனந்த,ராக் ஷச, நள,பிங்கள,காளயுக்தி,சித்தார்த்தி,ரவுத்ரி,துன்மதி,துந்துபி,உருத்ரோத்காரி,ரத்தாஷி,குரோதன,அக் ஷயஅதாவது ஆண் பெண்ணாக மாறி....உண்மையில் இரண்டு ஆண்களுக்கு பிறந்த குழந்தைகளாம்....இந்த ஓரினச் சேர்க்கையால் பெற்ற 60 பெயர்களை 60 ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் அழைப்பதாகவும் கூறப்படுகிறது,இந்த 60 பேரும் பிறந்த மாதம் சித்திரை என்பதால் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று சொல்லப்படுகிறது,,,,இது ஆரியக் கலாச்சாரக் கதை,இதை பகுத்தறிவவர் எவரும் ஏற்றுக்கொள்வதில்லை,தீபாவளி எவ்விதம் தமிழர் வாழ்வில் நுழைந்து விட்டதோ அவ்விதம் இதுவும் நுழைந்து விட்டது 2008 வரையில்!!! 1921 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய மறைமலை அடிகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு 500 தமிழறின்யர்களுடன் பச்சையப்பன் கல்லூரியில் கூடி திருவள்ளுவராண்டை கணக்கிட்டு தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார்கள்...அது நடை முறைக்கு வந்தது 2008 ஆம் ஆண்டு தான்...எது எப்படியோ ஆரிய கலாச்சார(கன்றாவி)கதைக்கு முற்றுப் புள்ளி வைத்தது மகிழ்ச்சியே....புத்தாண்டு வாழ்த்துகள் 15-01-2011(தமிழ்) 01-01-2011(ஆங்கில) 14-04-2011(சமஸ்கிருத) :-)
இப்போதைய சித்திரை வருடப்பிறப்பு தமிழருக்குரியதல்ல ஏனெனில் சுழற்சி முறையில் வரும் பிரபவ முதல் அட்சய வரையான அறுபது ஆண்டுகளில் ஒன்றின் பெயர்கள் கூட தமிழில் இல்லை. இது தொடர்ச்சியாக சுழற்சி முறையாக வந்தவண்ணமே உள்ளன. இப்பெயர்கள் ஆகமங்களின் பெயர்கள் என சோதிடர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஒருவர் பிறந்து அறுபதாம் ஆண்டு அவர்பிறந்த நட்சத்திரம் நாள் என்பன மீண்டும் வரும் இதை சாத்திரங்கள் சஷ்டி பூர்த்தி விழா என்கின்றன. பிரபவ முதல் அட்சய வரையான அனைத்தும் வடமொழிப்பெயர்களே. இந்த அறுபது ஆண்டுகளின் தோற்றம் பற்றி புராணங்கள் கூறும் புனைகதையானது நகைப்புக்கிடமானது. ஆணும் ஆணும் உடலுறவு கொண்டதன் மூலம் அறுபது புத்திரர்களைப் பெற்றனர். இந்த 60 புத்திரர்களின் பெயர்களில்தான் பிரபவ தொடக்கம் அட்சய வரையான அறுபது ஆண்டுகளும் அழைக்கப்படுகின்றன. இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழர்களை இழிவுபடு;த்தவே முயல்வர். எனவேதான் தமிழர்களுக்கென்று ஒரு தமிழ் ஆண்டு தேவையாக உள்ளது.
சிங்காரவேல் முதலியார் என்பவரால் தொகுக்கப்பட்ட “அபிதான சிந்தாமணி” என்ற நூலிலே(பக்கம் 1392) இந்த ஆணுக்கும் ஆணுக்கும் (சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்) பிறந்த 60 புத்திரர்களின் பெயர்களில் அறுபது ஆண்டின் பெயர்களும் அழைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தப்பிறப்பு எப்பொதிருந்து வந்தது என நோக்கில் இது நாயக்கர் காலப்பகுதியிலேயே இப் புராணக்கதை புனையப்பட்டது. அதற்குமுன் சேர, சோழ, பாண்டியர்களது காலத்தில் கூட இவை பற்றி எந்தக்கருத்துக்களும் இல்லை. மறைமலை அடிகள் கூட இதை ஆதாரப்டுத்தியுள்ளார் என்பது இங்கு சுட்டிக்கட்டத்தக்கது.
Monday, June 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment