உங்களின் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக உங்களை தண்டிப்பது,பிழை சொல்வது என்பது தவறு தான்.ஆனால் அந்த குற்றங்கள் இன்றும் அரங்கேறுவதால்,அதற்கு இன்றும் நீங்கள் தூபம் போடுவதால் தான் அதை எதிர்க்க,கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.
மொத்தத்தில் நாங்கள் முந்தைய பார்ப்பனர்களுக்கும் எதிரிகள் அல்ல,இன்றைய பார்ப்பனர்களுக்கும் எதிரிகள் அல்ல.முந்தைய பார்ப்பனீயத்துக்கும்,அதை வழி தொட்டு, நிலை நிலை நிறுத்தி,கடைபிடித்துக் கொண்டிருக்கும் இன்றைய பார்ப்பனீயத்துக்கும் எதிரிகள் அவ்வளவு தான்.
சுதந்திரமான(!) 50 வது ஆண்டு பொன்விழா கொண்டாடிய அதே நேரத்தில் உத்திரப் பிரதேசத்தில் ஒரு கோயிலிற்குள் அதுலா தேவி என்ற கீழ் சாதி என்று உங்களால் சொல்லப்பட்ட பெண்ணையும் அவர் கணவனையும் தீட்டு பட்டதெனக் கூறி மேலாதிக்க வர்க்கம் எரித்துக் கொன்றதே....அது எந்த காலத்தில் நடந்தது?
தேவதாசி முறை மூலம் விபச்சாரத்தை பரப்பிய பூரி ஜெகன்னாதர் கொயிலில் கடைசி தேவதாசியான சசிமணி தேவிக்கு(வயது 85)வயதானதால் சிறு வயது பெண்ணை அடுத்த தேவதாசிக்காக தேடிக்கொண்டிருக்கும் மேலாதிக்க வர்க்கத்தின் பேடித்தனம் இந்த காலத்திலும் தானே தொடர்ந்து கொண்டிருக்கிறது..!
கே.ஆர். நாராயணன் உங்களால் வகுக்கப்பட்ட கோட்பாட்டின் படி சூத்திரன் என்பதாலேயே வெங்கட்ராமன் வரை கொடுத்து வந்த சிவப்புக் கம்பள விரிப்பு வரவேற்பை கே.ஆர். நாராயணன் மற்றும் அவர்களுக்குப் பிறகு எவருக்கும் கிடையாது என்று கூறினாற்களே காஞ்சி சங்கர மடத்தில் அது எப்பொது நடந்தேறியது?முந்தைய காலத்திலா....?
இன்றைய கால கட்டத்திலும் தீண்டாமையால் திறக்கப்படாத கோயில்கள் எத்தனை மற்றும் இராம நாதபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் எத்தனை தேனீர் கடைகளில் இரட்டை குவளை முறைகள் உள்ளன என்பது தெரியுமா உங்களுக்கு?
இவையெல்லாம் இன்றைய காலத்திலும் தானே நடந்து கொண்டிருக்கிறது...இன்றைய கால கட்டத்திலும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மக்களும்,எம் மக்களை கருவறைக்குள் தடுக்கும் கோயில்களும்,தமிழை நீச பாஷை என்று சொல்லும் சிதம்பரம் தீட்சிதர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்....!?
கீழ் வெண்மணியில் வாய் திறந்து பேசியது உங்களால் சூத்திரப் பட்டம் கட்டப்பட்ட எம் மக்களாக இருந்ததால் தானே இன்றைய கால கட்டத்திலும் அவர்கள் எரித்துக் கொல்லப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்!
வட நாட்டில் இன்றளவும்,தென் நாட்டில் சில இடங்களிலும்(பெரியாரின் காரணமாக நிகழ்வுகள் குறைந்திருக்கின்றன,பகுத்தறிவு நிறைந்திருக்கின்றன)சாதீய,தீண்டாமை வன் கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை உங்களால் மறுக்க,மறைக்க முடியுமா?
தட்டினால் திறக்கப்படும் மற்றும் கேட்டால் கொடுக்கப்படும் என்பது மட்டும் அல்ல தானாகவெ திறக்கும்,கொடுக்கும்(அது தான் சங்கரராமன் விடயத்தில் தட்டி...கொடுத்தார்களே!!!) என்று சேகரால்(சிரிப்பு நடிகர்!?)சான்றிதழ் வழங்கப்பட்ட சங்கர மடத்தின் மடாதி பதியாக ஒரு கீழ் சாதியைச்(உங்களால் வகுக்கப்பட்ட கொள்கைப்படி...) சேர்ந்த ஒருவரை நியமிக்கட்டும்,அவ்விதம் செய்தால், நாங்கள் அனைவரும் உங்களால் கண்டு பிடிக்கப்பட்ட உங்களின் கோயிலிற்கு வருவதோடு மட்டுமல்லாமல்,உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட உங்கள் சாமியையும் கும்பிடுகிறோம் அங்கு நாங்கள் சமமாக நடத்தப்பட்டால்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment