Thursday, November 20, 2008

ஜாதகம் ஓர் ஆய்வு...

ஜாதகம் மற்றும் ஜோசியம் என்பது அறிவியல் சம்பந்தப்பட்டது இல்லை ஜாதகம் சூரியனை ஒரு கிரகம் என்ற அளவில் பார்க்கிறது, நவக்கிரகம் என்ற அளவில் அவர்கள் பிறந்த நேரத்தை கணக்கில் கொண்டு அந்த நேரத்தில் கிரகம் இருக்கும் இடத்தை வைத்து கிரக பலன் மற்றும் கிரக தோஷம் போன்றவைகளை கணக்கிடுவதாக சொல்வார்கள். அறிவியல் சூரியனை நட்சத்திரம் என்ற அளவில் பார்க்கிறது. ஜாதகம் பூமி மைய கொள்கையை அடிப்படையாக கொண்டது.(Geo Centric Theory) அறிவியல் சூரிய மைய கொள்கையை(Neo Centric Theory) அடிப்படையாக கொண்டது மட்டும் அல்லாமல் அதை கெப்ளர்,கோபர் நிக்கஸ் மற்றும் ஐன்ஸ்டீன் அவர்களால் நிரூபணமும் செய்யப்பட்டது. புளூட்டோவை வைத்து பலன் சொல்கிறார்கள் இவர்கள் ஆனால் அறிவியல் இன்று புளூட்டோ கிரகமே இல்லையென்று சொல்கிறது. மேலும் இவர்கள் கூறும் ராகு,கேது போன்றவை கிரகம் இல்லை அவைகள் நிழல் பிம்பங்கள் என்பது அறிவியலில் நிரூபணம் ஆனவை. மேலும் பிறந்த நேரத்தைக் கொண்டு அந்த நேரத்தில் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து ஜாதகத்தைக் கணக்கிட்டு அதன் மூலம் எதிர்காலத்தை கணிப்பதாகச் சொல்பவர்களிடம் ஒரு கேள்வி...குழந்தை பிறந்த நேரத்தை துல்லியமாக கணிக்க இயலாத பொழுது,அந்த நேரத்தில் கோள்கள் இருக்கும் நிலையையும் சரியாக கணிக்க இயலாத பொழுது அதன் மூலம் ஜாதகத்தையும் அதன் மூலம் எதிர்காலத்தையும் கணிக்க இயலும் என்பது சுத்த பித்தலாட்டமே!!! மேலும் பூகம்பம் மற்றும் நில நடுக்கத்தில் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான,லட்சக்கணக்கான மக்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்து விட்டது என்றி இவர்களால் நிரூபிக்க முடியுமா?பெரியார் கூற்றுப்படி இன்ன காலத்தில் இன்ன நேரத்தில் ஒருவரால் பொருள் இழப்போ மற்றும் உயிரிழப்போ ஒருவர்க்கு நிகழும் பட்சத்தில் அந்த இருவரின் ஜாதகத்திலும் ஒருவர்க்கு பொருள் லாபம் என்றும்,மற்றவர்க்கு பொருள் இழப்பு என்றும்,ஒருவர்க்கு உயிரிழப்பு என்றும் இன்னொருவர்க்கு இன்ன நேரத்தில் இவரை கொலை புரிவார் என்றும் இருக்க வேண்டும்,இது போன்ற நிகழ்வுகளை இந்த உலகில் உள்ள அனைவருக்கும் இவர்களால் நிரூபிக்க முடியுமா? ஜாதகம் மற்றும் ஜோசியம் மதக் கொள்கைகளில் இருந்தே வந்தது எவ்வாறெனில்... இந்து மதத்தில் 4(ரிக்,யஜுர்,சாம,அதர்வண) வேதங்கள்,6 வேதாந்தங்கள் மற்றும் 108 உப நிடதங்கள் உள்ளன. 4 வேதஙகள் மூலம் எழுந்த 6(சிஷ்யை,கல்பகம்,வியாகரனம், நிருத்தம்,சந்தஸ்,ஜோதிடம்) உப நிடதங்களில் 6 வது உட்பிரிவே ஜோதிடம். ஜோதிடத்தில் 3 பிரிவுகள் உள்ளன. கணித ஸ்கந்தம்- பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்டது. ஜாதக ஸ்கந்தம்-பிறப்பை அடிப்படையாக கொண்டது. ஸம்ஹிதா ஸ்கந்தம்- நேரம்,சடங்கு மற்றும் வாஸ்தை அடிப்படையாக கொண்டது. மேலும் நட்சத்திரம்,லக்கினம் மற்றும் திதி போன்றவைகளின் கதைகள் சரித்திர புராணங்களில் இருந்து வருவதை காணலாம் மேலும் ஜாதக மற்றும் ஜோசியத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஆத்மா,முற்பிறவி,கருமம்,தலைவிதி,பாவம்,புண்ணியம்,சுபம் மற்றும் அசுபம் போன்றவைகளும் மதங்களில் இருந்தே வந்திருக்கின்றது. அறிவியலில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து அதே நேரம் அறிவியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு கற்பனையாகவும்,ஆதாரம் இல்லாமல் கணிப்பது போன்ற வரையறையை மட்டும் வைத்து குறிப்பிட்ட சமூகத்தினர் லாபம் பெரும் நோக்கோடு புணையப்பட்ட வேதாந்தங்களில் ஒன்றெ ஜோதிடம் என்பது. மதத்திற்கு மதம் இவற்றின் மீதான நம்பிகைகளும் வேறுபடுகின்றன.சில மதங்கள் இவைகளை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கின்றன. ஆனால் எந்த அறிவியல் அறிஞயர்களும் இவை போன்ற ஜாதக,ஜோசிய,சகுன,கைரேகை மற்றும் குறிப்புகளை நம்புவதே இல்லை. பெரியார் கூற்றுப்படி இவைகள் மெய்யன்றோ மனித சமுதாயத்திற்கு பயன்படுபவைகளாகவோ இருந்திருந்தால் காற்றின் அசைவையும்,கம்பி இல்லாத் தந்தியில் சப்தத்தையும்,அசைவையும், உருவத்தையும் கண்டரிந்த நிபுணர்களும் கல்,புல்,பூண்டு,செடி,கொடி,மரம் போன்றவைகளில் உயிரை கண்டரிந்த மேதைகளும் ஆகாயத்தின் மேலாகவும்,கீழாகவும் பல லட்ச மைல் தூரத்தை கண்டுபிடித்த வானவியல் ந்யானிகலும் சேர்ந்து அரசாங்கமும் இணைந்து இப்பேற்பட்ட பயனுள்ள,லாபகரமான விஷயத்திற்கு ஒரு ஆராய்ச்சி சாலை அமைத்து இந்த ஜோதிட,ஜாதகம் மூலமாக மக்களுக்கு வரும் கஷ்ட நஷ்டங்களை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யாமல் இருந்திருக்க மாட்டார்களா...?

No comments: